உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அசாமில் எக்ஸ்பிரஸ் ரயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டன; 8 யானைகள் உயிரிழந்த சோகம்

அசாமில் எக்ஸ்பிரஸ் ரயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டன; 8 யானைகள் உயிரிழந்த சோகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

குவஹாத்தி: அசாம் மாநிலத்தில் ராஜஸ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டு ஏற்பட்ட விபத்தில், 8 யானைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.அசாம் மாநிலத்தின் நாகோன் மாவட்டத்தில் காம்பூர் பகுதியில் ராஜஸ்தான் எக்ஸ்பிரஸ் ரயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 8 காட்டு யானைகள் உயிரிழந்தது என அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரு குட்டி யானை மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது. இந்த சம்பவம் அதிகாலை 2.17 மணிக்கு நிகழ்ந்து இருக்கிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=q00sjo2k&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0யானைகள் கூட்டத்தை கவனித்த ரயில் பைலட் அவசரமாக நிறுத்த முயற்சித்தார். இருப்பினும் யானைகள் மீது ரயில் மோதி விட்டது. எனினும் பயணிகள் யாருக்கும் காயம் இல்லை. பின்னர் தடம் புரண்ட பெட்டிகளில் இருந்த பயணிகள், மற்ற பெட்டிகளில் உள்ள காலியாக இடங்களுக்கு மாற்றப்பட்டனர். பின்னர் தடம் புரண்ட பெட்டிகளை அப்புறப்படுத்திய பிறகு ரயில் புறப்பட்டு சென்றது. இந்த சம்பவம் நிகழ்ந்த பகுதி வழியாக செல்ல திட்டமிடப்பட்ட ரயில்கள் வேறொரு பாதை வழியாக இயக்கப்படுகின்றன. மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Venugopal S
டிச 20, 2025 18:21

இதற்கும் காரணம் ஜவஹர்லால் நேரு என்று ஒரு அறிக்கை விட வேண்டியது தானே!


யானைபாபு
டிச 20, 2025 18:01

யான வழித்தடத்தில் ரயில் பாதை போட்டு நாட்டை முன்னேத்துறாங்க.


அப்பாவி
டிச 20, 2025 17:59

யானைகளுக்கு கவச் போட்டு உடுங்க. ரயில் கவச் எல்லாம் வேலைக்கு ஆகாது.


Gokul Krishnan
டிச 20, 2025 14:32

மிக வருத்தம் அளிக்கிறது இத்தனை வருடங்களாக அது யானைகள் பயணிக்கும் வழி வாழும் வழி என்று ரயில்வே துறைக்கு தெரியாத தகுந்த வேலிகள் அலாரம் போன்றவற்றை ஏன் ஏற்படுத்த வில்லை


Nathansamwi
டிச 20, 2025 18:10

பண்ண மாட்டார்கள் ...புதுசா எதுக்கு காசு வசூல் பண்ணலாம்னு குழு அமைப்பாங்க ...போன முறை ரயில்வே ல லககேஜ் கு புது கட்டணம் அமைச்ச மாதிரி ...


அப்பாவி
டிச 20, 2025 12:07

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்துக்கு காரணமான அந்த நாலு மிண்ணணுக்கள் தான் காரணம். இல்லேன்னா நேரு. ரயில்வே அமைச்சர் ரயில்ல போவதே இல்லியே. அவர் எப்படி காரணமாவார்?


Thiru, Coimbatore
டிச 20, 2025 10:30

எட்டு யானைகள்... வாசித்து விட்டு நமக்கென்ன என கடந்து செல்வோம்... ஆனால் என்றாவது இந்த இயற்கை அழித்தல் கொடூரத்தின் மோசமான பின் விளைவுகளை நிச்சயம் மனித குலம் அனுபவிக்கும்... இதே போல தான் கோவை மதுக்கரையில் இதுவரை நூற்றுக்கணக்கான யானைகள் பலியாகி இப்போது அந்த வழிகளில் ஏகப்பட்ட சென்சார் அலாரங்கள் பொருத்தப்பட்டு ஓரளவுக்கு இந்த பிரச்சனை மட்டு படுத்தப்பட்டு இருக்கிறது ஆழ்ந்த வருத்தங்கள்


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
டிச 20, 2025 10:24

ரயில்வே மந்திரி ஆழ்ந்த உறக்கம்,


Apposthalan samlin
டிச 20, 2025 10:22

புதிய தொழில் நுட்ப்பம் சென்சார் என்று எல்லாம் கதை விட்டனவா . அதிக லாபம் தரக்கூடியது ரயில்வே .அநியாயமா 8 yannaikalai கொன்டு விட்டர்கள்


raja
டிச 20, 2025 10:12

ஆழ்ந்த இரங்கல்


சமீபத்திய செய்தி