உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ம.பி.,யில் பாலத்தில் இருந்து கார் கவிழ்ந்து 8 பேர் பலி; 6 பேர் படுகாயம்

ம.பி.,யில் பாலத்தில் இருந்து கார் கவிழ்ந்து 8 பேர் பலி; 6 பேர் படுகாயம்

போபால்: ம.பி.,யில் பாலத்தில் இருந்து கார் கவிழ்ந்ததில் 8 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்துள்ளனர்.ம.பி.,யின் ஜபல்பூர் மாவட்டத்தை பலர் இரண்டு இரண்டு கார்களில் தாமோ மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றுக்கு சென்று கொண்டு இருந்தனர். அதில் ஒரு காரில் 15 பேர் பயணித்தனர். தாமோ மாவட்டத்தில் வறண்ட நதியின் மேல் இருந்த பாலத்தில் கார் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் கவிழ்ந்தது.அதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 சகோதரிகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர். இவர்கள் அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிறகு மேல் சிகிச்சைக்காக ஜபல்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்ட போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

अप्पावी
ஏப் 23, 2025 10:16

கார் வாங்கறவன் கார் இட்ட மாட்டான். எவனாவது ஒரு டிரைவரை நம்பி காரைக் குடுத்திருவான். டிரைவருக்கு என்ன மன உளைச்சலி, என்ன போதைப் பழக்கமோ யாருக்கு தெரியும். கத்துக் குட்டியெல்லாம் கார் ஓட்டறான். முண்டியடிச்சிக்கிட்டு எல்லோரையும் முந்தி போகணும். ஒரேயடியா 7,8 பேர் முந்திக்கிணு மேலே போயிட்டாங்க.


பல்லவி
ஏப் 23, 2025 03:45

நம்ம ஆளுங்க சொல்ற ஆலோசனை எல்லாம் அங்கே சட்டை பண்ண மாட்டாங்க அவாளுக்கு சொல்ற ஆலோசனை எல்லாம் சங்கு ஊதற மாதிரி இருக்க வேண்டும் .


Vasan
ஏப் 22, 2025 20:44

Root cause for such incidents vehicle fall off from bridge is under height of side railings, which should be minimum 8 feet height, and the design of the side railings, which must be of girder design instead of simple railings. While designing the bridge, safety to be accorded more priority than project cost.


Karthik
ஏப் 22, 2025 20:38

ஒரு காரில் 15 பேர் பயணம் போன சம்பவம் கார் வைத்திருப்பவருக்கு சிறந்த உதாரணம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை