உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பள்ளத்தாக்கில் வாகனம் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் பலி; மஹாராஷ்டிராவில் சோகம்

பள்ளத்தாக்கில் வாகனம் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் பலி; மஹாராஷ்டிராவில் சோகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நந்துர்பார்: மஹாராஷ்டிராவில் பள்ளத்தாக்கில் வாகனம் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.நந்துர்பார் மாவட்டத்தில் உள்ள அஸ்டம்பா ரிஷி யாத்திரையை முடித்துக் கொண்டு, மஹிந்திரா பிக்கப் வாகனத்தில் சுமார் 30க்கும் மேற்பட்டோர் சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். சந்த்ஷைலி மலைத்தொடரில் உள்ள பள்ளத்தாக்கில் நேற்று இரவு இந்த வாகனம் விழுந்துள்ளது. இந்த விபத்தில் வாகனத்தில் பயணித்த 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 28 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்களில் 15 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார், காயமடைந்தவர்கள் மீட்டு உடனடியாக அருகே உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து நடந்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். துாக்கம் இல்லாத நள்ளிரவு பயணம் ஆபத்தானது. ஆகவே நள்ளிரவு பயணத்தை தவிர்ப்பது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ