மேலும் செய்திகள்
கிரைம் செய்திகள்
19-May-2025
கொப்பால் : சொத்து பிரச்னையில், 35 வயது வாலிபரை கொன்ற பெண் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள இருவரை தேடி வருகின்றனர்.கர்நாடக மாநிலம், கொப்பால் மாவட்டம், குஷ்டகியின் தாவரகெரே டவுன் சிந்தனுார் கிராசில், மே 31ம் தேதி இரவு பைக்கில் சென்று கொண்டிருந்த நபரை, அரிவாள், கத்தி, உருட்டு கட்டை போன்ற ஆயுதங்களால் சிலர் வழிமறித்தனர்.புகார்அவர்களிடம் இருந்து தப்பிய நபர், அருகில் இருந்த பேக்கரி கடைக்குள் தஞ்சம் புகுந்தார்.அப்போது அவரை விரட்டி வந்த கும்பல், பேக்கரிக்குள் புகுந்து சரமாரியாக வெட்டினர். பேக்கரியில் இருந்து வெளியே இழுத்து, மீண்டும் சரிமாரியாக வெட்டினர். இதில், படுகாயம் அடைந்த அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த தாவரகெரே போலீசார், அங்கு வந்து விசாரணை நடத்தினர்.இதில், இறந்தவர் தாவரகெரே டவுனை சேர்ந்த சன்னப்பா, 35, என்பது தெரியவந்தது. அங்கு வந்த அவரது மூத்த சகோதரர் துருகப்பா, 'தன் சகோதரர் சின்னப்பாவுக்கும், உறவினர் ரவி நாரினாலுக்கும், 20 ஆண்டுகளாக சொத்து பிரச்னை உள்ளது. ரவி நாரினால், என் சகோதரருக்கு கொலை மிரட்டல் விடுத்தார். அவர் தான் என் சகோதரரை கொலை செய்துள்ளார்' என்று புகார் அளித்தார்.தலைமறைவுவழக்கு பதிவு செய்த போலீசார், பேக்கரியில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து, ரவி நாரினால், பிரதீப், மஞ்சுநாத், நாகராஜ் நாரினால், மற்றொரு மஞ்சுநாத், கவுதம், குருபாதம்மா, பிரமோத் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள இருவரை தேடி வருகின்றனர்.
19-May-2025