உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 800 பாட்டில்களில் இருந்த மதுபானம் காலி: எலி குடித்து விட்டதாக கூறி ஏமாற்றிய வர்த்தகர்கள்

800 பாட்டில்களில் இருந்த மதுபானம் காலி: எலி குடித்து விட்டதாக கூறி ஏமாற்றிய வர்த்தகர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராஞ்சி: ஜார்க்கண்டின் தான்பாத் மாவட்டத்தில் மதுபான கடைகளில் இருந்த 800 பாட்டில் மதுபானம் மாயமானது. அதனை எலி குடித்து விட்டதாக வர்த்தகர்கள் விட்ட கதையை நம்பாத அதிகாரிகள் , இழப்பை சரி செய்வதற்கு பணத்தை செலுத்தும்படி உத்தரவிட்டு உள்ளனர்.ஜார்க்கண்டில் வரும் செப்., 1 ம் தேதி முதல் புதிய மதுபானக் கொள்கைகள் அமலாக உள்ளது. இதன்படி கடை ஒதுக்கீட்டை அரசு செய்து வந்த முறையில், அதனை ஆன்லைன் குலுக்கல் முறைக்கு மாற்றப்பட உள்ளது. இதன்மூலம் வருவாயில் வெளிப்படைத்தன்மை ஏற்படுவதுடன், அரசுக்கு உள்ள நெருக்கடி குறையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.புதிய விதிமுறைகள் அமலாக உள்ள நிலையில், மதுபான கையிருப்பு குறித்து அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் ஆய்வு செய்து வருகின்றன. அதன்படி, தான்பாத் மாவட்டத்தில் மதுபான கடைகளில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 802 மதுபான பாட்டில்களின் விற்பனை கணக்கில் காட்டப்படவில்லை என்பதை அறிந்தனர்.இது குறித்து மதுபான கடைகளை நடத்தி வருபவர்களிடம் விசாரித்த போது, அவர்கள் அளித்த பதிலைக் கேட்ட அதிகாரிகளுக்கு மயக்கம் வரும் நிலை ஏற்பட்டது. அதாவது, அந்த பாட்டிலில் இருந்த மூடியை எலிகள் தின்றுவிட்டு மதுபானம் அனைத்தையும் குடித்து விட்டன எனத் தெரிவித்தனர். அவர்கள் 'அளந்து ' வி ட்ட கதையை அதிகாரிகள் நம்பவில்லை. மதுபானம் விற்ற பணத்தை திருப்பி செலுத்த வேண்டும் என உத்தரவிட்டு உள்ளனர்.இவ்வாறு ஊழலுக்கு எலிகள் மீது குற்றம்சாட்டப்படுவது ஜார்க்கண்டில் இது முதல்முறை அல்ல. போலீஸ் பிடியில் இருந்த 10 கிலோ கஞ்சா மற்றும் 9 கிலோ கஞ்சா இலைகளை காணவில்லை. அவற்றை எலி தின்றுவிட்டதாக போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். ஆனால், இதனை ஏற்காத நீதிமன்றம் போலீசாருக்கு கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூலை 20, 2025 12:42

புரியலையே ..... அந்த வர்த்தகர்கள் அத்தனை பேருமா மஞ்சள் துண்டு அணிபவர்கள் ??


c.mohanraj raj
ஜூலை 14, 2025 14:08

இது என்ன பிரமாதம் 25 ஆயிரம் சர்க்கரை மூட்டைகளை எறும்பு தின்னும் பொழுது எலி பிடிக்காதா


Kalyanaraman
ஜூலை 14, 2025 08:10

கருணாநிதியின் கொள்கையை இன்றளவும் பின்பற்றும் வாரிசுகளோ இவர்கள்???


P Vijai Anand
ஜூலை 14, 2025 08:01

காமராஜர் கக்கன் Jeeva Ivanga எல்லாம் அவர்கள் கண்ணுக்கு தெரியலையா? கருணாநிதி மட்டும்தான் தெரியுதா?


theruvasagan
ஜூலை 14, 2025 11:03

காமராஜரையும் கக்கனையும் தோற்கடித்துவிட்டு கெடுதலை கொண்டு வந்து என்று அரியணை ஏற்றினானோ அன்றிலிருந்தே தமிழனுக்கு பார்க்கும் திறன் சிந்திக்கும் திறன் எல்லாம் போய்விட்டன.


suresh guptha
ஜூலை 19, 2025 15:37

BECAUSE HE AND HIS FAMILY CORRUPTED TO THE TUNE OF 5 YEAR BUDGET WITHOUT ANY ASSITANCE OF GST,TASMAC ETC WITH SURPLUS U CAN PRESENT


Natarajan Ramanathan
ஜூலை 14, 2025 00:35

திராவிட மாடலை இந்தியாவே பின்பற்றுகிறது என்று சுடலை சும்மாவா சொன்னார்?


Siva Balan
ஜூலை 13, 2025 23:49

கலைஞரின் மறு பிரவியாக இருப்பார்களா அல்லது அங்கு சுற்றுலா சென்றாரா....


sridhar
ஜூலை 13, 2025 22:12

இவ்வளவு சீக்கிரம் மறுபிறவி எடுத்து மளமளவென்று வளர்ந்து


Ramesh Sargam
ஜூலை 13, 2025 22:11

ஆஹா அதுஎன்னப்பா அந்த எலிகள் மொடாக்குடியன் எலிகளாக உள்ளன. கொஞ்சம் மொடாக்குடியன் எலிகளை தமிழகத்துக்கு அனுப்புவீர்களா?


theruvasagan
ஜூலை 13, 2025 22:04

என்னிக்கோ எறும்பு தின்னுடுச்சு. கரையான் அரிச்சுடுச்சுன்னு நல்லா கதையை கட்டினான் பாருங்க. இப்ப அது எல்லாருக்கும் உபயோகப்படுது.


கிருஷ்ணன்
ஜூலை 13, 2025 22:02

இதுதான் எங்கள் மாடலை இந்தியா பின்பற்றுகிறது என்று சொன்னார்களா..,..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை