உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சத்தீஸ்கரில் ரூ.24 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட 9 நக்சல்கள் சரண்

சத்தீஸ்கரில் ரூ.24 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட 9 நக்சல்கள் சரண்

பிஜாப்பூர்: சத்தீஸ்கரில் 24 லட்சம் ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்த நக்சல்கள் 6 பேர் உள்ளிட்ட 9 நக்சல்கள் சரணடைந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.நக்சல்கள் நடவடிக்கை முழுவதுமாக அழிக்கப்படும் என்று மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. நக்சல் அமைப்பினரின் முக்கிய பதுங்கும் இடங்கள் தாக்கி ஒழிக்கப்படுகின்றன. நக்சல் அமைப்பின் முன்னணி தலைவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.இதனையடுத்து நக்சல்கள் சரண் அடையும் நிகழ்வுகள் தொடர்ந்து வருகின்றன.இந்நிலையில் தற்போது 9 நக்சல்கள் சரண் அடைந்துள்ளார்கள். இவர்களைப் பற்றிய தகவல் தருபவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் சார்பில் 24 லட்சம் ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது.இது தொடர்பாக போலீசார் கூறியதாவது:சரண் அடைந்தவர்கள் பக்சு ஓயம் 27, ஹித்மா என்கிற ஹிரியா 26, மங்கு உய்கா 38, ரோஷன் கரம் 24, மங்களோ போடியம் 23, ஆகியோர் 24 லட்சம் ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த நக்சலைட்டுகள், மாநில அரசின் புதிய சரணடைதல் மற்றும் மறுவாழ்வு கொள்கையால் ஈர்க்கப்பட்டு பல நக்சலைட்டுகள் வன்முறையை கைவிட்டு சரணடைந்து வருகின்றனர்.பிஜப்பூர் மாவட்டத்தில் இதுவரை 277 நக்சல்கள் சரணடைந்துள்ளனர்.சரணடைந்த நக்சலைட்டுகளுக்கு மறுவாழ்வு, வேலைவாய்ப்பு மற்றும் கல்வி போன்ற பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தவிர, நக்சல் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு வழங்கப்பட்டு வருகிறது.இவ்வாறு போலீசார் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி