உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வங்கதேச பிரஜைகள் 92 பேர் கைது

வங்கதேச பிரஜைகள் 92 பேர் கைது

புதுடில்லி: தென்மேற்கு டில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததற்காக 92 வங்கதேச பிரஜைகள் கைது செய்யப்பட்டனர்.தென்மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக வசிக்கும் வெளிநாட்டினரைக் கண்டறியும் 10 நாள் சிறப்பு தேடுதல் வேட்டையை சமீபத்தில் காவல்துறை துவக்கியது.உளவுத்துறை அளித்த ரகசிய தகவல்களின் அடிப்படையில் பல்வேறு பகுதிகளில் வீடு வீடாக சென்று போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.நகர், கிஷன்கர், சப்தர்ஜங் என்க்ளேவ், வசந்த் குஞ்ச் (வடக்கு மற்றும் தெற்கு), கபாஷேரா, பாலம் கிராமம், டில்லி கன்டோன்மென்ட், சாகர்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, 92 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டனர்.இவர்களில் பெரும்பாலானோர் டில்லியில் பல ஆண்டுகளாக வசித்து வருவது விசாரணையில் தெரிய வந்தது.நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம், கன்டோன்மென்ட் பகுதியில் 12 ஆண்டுகளாக சட்டவிரோதமாக வசித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.கடந்த ஆண்டு டிசம்பர் முதல் 142 பேரை இதுவரை, தென்மேற்கு மாவட்ட போலீசார் கைது செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ