விமான நிலையத்தில் ரூ.9.2 கோடி கோகைன்
தேவனஹள்ளி : பெங்களூரு ரூரல், தேவனஹள்ளியின், கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில், நேற்று காலை துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணி ஒருவர் வந்திறங்கினார். அவரை கஸ்டம்ஸ் அதிகாரிகள், ஸ்கேன் செய்தனர். அப்போது போதைப்பொருள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 9.2 கோடி ரூபாய் மதிப்புள்ள கோகைன் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். பயணி மீது, வழக்கு பதிவாகியுள்ளது.