உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 10ம் வகுப்பு பாஸ் ஆகவில்லை! தேஜஸ்வியை சேதாரமாக்கிய பிரசாந்த் கிஷோர்

10ம் வகுப்பு பாஸ் ஆகவில்லை! தேஜஸ்வியை சேதாரமாக்கிய பிரசாந்த் கிஷோர்

பாட்னா; ஜி.டி.பி., பற்றி தெரியாத, 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாத தேஜஸ்வி யாதவால் எப்படி பீகார் மாநிலம் முன்னேறும் என்று ஜன் சுராஜ் கட்சி நிறுவனரும், பிரபல தேர்தல் வியூக நிபுணருமான பிரசாந்த் கிஷோர் விமர்சித்துள்ளார்.பல கட்சிகளுக்கு தேர்தல் உத்திகள் வகுத்து கொடுப்பதில் வல்லவரான பிரசாந்த் கிஷோர் ஜன் சுராஜ் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். தமது அமைப்பை வரும் அக்டோபர் 2ம் தேதி அரசியல் கட்சியாக பதிவு செய்ய உள்ளதாக அவர் ஏற்கனவே அறிவித்து உள்ளார். இந் நிலையில், போஜ்புர் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த கூட்டம் ஒன்றில் பேசிய பிரசாந்த் கிஷோர், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரான தேஜஸ்வி யாதவை மறைமுகமாக விமர்சித்து உள்ளார். கூட்டத்தில் அவர் பேசியதாவது;எந்த வித வசதிகளும் இல்லாமல் ஒருவர் கல்வி கற்கவில்லை என்றால் அதை நம்மால் புரிந்து கொள்ளமுடியும். ஆனால்,சிலரின் (தேஜஸ்வி யாதவ்)பெற்றோர், மாநிலத்தின் முதல்வராக இருந்தும் 10ம் வகுப்பு கூட தாண்டவில்லை என்றால் என்ன சொல்வது? கல்வியின் மீது அவர்கள் கொண்ட அக்கறையை தான் இது காட்டுகிறது.9வது தோல்வியை பெற உள்ள அவர் பீகார் மாநில வளர்ச்சியை பற்றி சிந்திக்கிறார். ஜி.டி.பி மற்றும் ஜி.டி.பி வளர்ச்சிக்கும் இடையே உள்ள வித்தியாசம்கூட அவருக்கு தெரியாது. அப்படி இருக்கும் போது பீகார் எப்படி முன்னேறும்? முன்னாள் முதல்வரின் மகன் என்ற அடிப்படையில் தான் கட்சியில் முன்னிலையில் உள்ளார். அதையும் தாண்டி நற்பெயரை பெற வேண்டும் என்றால் கடுமையாக உழைத்து தம்மை நிரூபிக்க வேண்டும். வரும் 10ம் தேதி சுற்றுப்பயணம் தொடங்கும் அவர், நடைபயணமாக சென்று மக்களை சந்திக்க முடியுமா? மாநிலத்தில் ஒட்டுமொத்தமுள்ள மக்கள் தொகையில் 1.97 சதவீதம் உள்ள 23 லட்சம் அரசு ஊழியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஒரு 5 நிமிடம் எந்த பேப்பரையும் படிக்காமல் சோசலிசம் பற்றி அவரால் பேசமுடியுமா? இதுபோன்ற தலைப்புகளில் பேச அவருக்கு போதிய புரிதல் இல்லை.இவ்வாறு பிரசாந்த் கிஷோர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

பேசும் தமிழன்
செப் 03, 2024 19:14

தேஜஸ்வி கூட்டாளி பப்பு... கூட்டி கழித்து பாருங்கள்..... கணக்கு சரியாக வரும்......இரண்டு பேருமே தத்திகள்.


kulandai kannan
செப் 03, 2024 14:38

இவர் கூற்று அப்படியே தமிழகத்திற்கும் பொருந்தும். நம்மவர்கள் எல்லோரும் லயோலா கல்லூரி BA தானே.


C.SRIRAM
செப் 03, 2024 13:12

காமராஜரை தவிர வேறு எந்த படிக்காத தற்குறி அரசியல் வியாதியும் இந்தியா ஜனநாயத்துக்கு சாபக்கேடு தான் . இந்த வியாதிகளுக் காட்டும் ஏன் குறைந்த பட்ச கல்வி தகுதி மற்றும் ஒய்வு பெரும் வயது எல்லாம் நடை முறை படுத்த கூடாது ?.


venugopal s
செப் 03, 2024 12:59

அதே போல் மற்றொருவர் கடந்த பத்து ஆண்டுகளாக நாட்டையே ஆண்டு கொண்டு இருக்கிறார் என்ற விஷயம் இவருக்கு தெரியாதா?


Raman
செப் 03, 2024 22:26

Anti-national repeatedly spotted


Naga Subramanian
செப் 03, 2024 12:11

அட போங்க . இங்க ஒருத்தரு , மற்றவர் எழுதி கொடுக்கும் துண்டு சீட்டே தாரக மந்திரமாக செயல்படுகிறார். இதை எப்படி சொல்வீர்கள்.


Rajarajan
செப் 03, 2024 11:36

இதைத்தான் பாஸ் நாங்க இரத்தின சுருக்கமா எப்போதும் சொல்றது. அரசியல்வாதி ஆகிறது ரொம்ப எளிது, அதுக்கு கல்வித்தகுதி தேவையே இல்லை. ஆனால், அட்மினிஸ்ட்ரேட்டர் என்ற நிர்வாகி ஆக , படிப்பு முக்கியம். இங்க இந்த ரெண்டுக்கும் வித்தியாசம் புரியறதில்ல. ஆனால், எல்லோருமே அரசியல்வாதி ஆகா தான் விரும்பறாங்க. நோகாம நோம்பு கும்பிட. நம்ம நாட்டுக்கு இனி அரசியல்வாதி தேவையில்லை. சிறந்த அட்மினிஸ்ட்ரேட்டர் என்கிற நிர்வாகி தான் வேண்டும். இப்போ புரியுதா?


GSR
செப் 03, 2024 11:54

காமராஜ் என்ன படிப்பு இருந்தததால் நிர்வாகம் செய்தார்? எம் ஜி ஆர் என்ன படிப்பு இருந்தததால் பாமாயில் உட்பட்ட பல பிரச்சினைகளை கையாண்டார் ? அதற்கு பிறகு ...எம் பி ஏ, சார்ட்டர்ட் அக்கவுன்டென்ட் எல்லோரும் நிர்வாக திறன் பெற்றவர்களா? கற்றல் ஆர்வமும், மக்கள் பற்றிய கவலை, நேர்மை, முடிவு எடுக்கும் திறன், தொலைநோக்கு - இவையெல்லாம் ஆளுமை சம்பந்த்த்ப்பட்டவை - மெக்காலே முறை கல்வி சம்பத்த்ப்பட்டவை அல்ல.


Rasheel
செப் 03, 2024 11:10

இங்கே நாட்டில் உள்ள போலி செகுலர் கூட்டம் அனைத்தும் ஒன்று படிக்காத கூட்டம் இல்லே படிப்பை விலைக்கு வாங்கிய கூட்டம். நாடு முழுவதும் சட்டமன்ற பாராளுமன்ற நடவடிக்கையை நோக்கினால் இது தெரியும்.


சமூக நல விரும்பி
செப் 03, 2024 11:01

எதுக்கு வம்பு என்று தான் எங்க முதல்வர் தமிழ் நாட்டில் பிரஸ் மீட் கொடுப்பதை தவிர்த்து விடுவார்.


S.Martin Manoj
செப் 03, 2024 09:49

இது என்ன பிரமாதம் எந்த கல்லூரியில் பட்டம் வங்கினார்னு அவருக்கே தெரியாது


ஆரூர் ரங்
செப் 03, 2024 09:33

நீங்க உட்கார்த்தி வெச்ச எங்க மாநில முதல்வர் ஒரு BA பட்டதாரி. என்ன கொடுமைன்னா இங்க வாலாட்டும் பிராணிகள் கூட அதே பட்டத்தை வாங்கிவிடலாம் என அவங்க ஆளே சொல்றார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை