உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மனைவிக்கு தங்கத்தில் தாலி வாங்க ஆசை: 93 வயது முதியவருக்கு கிடைத்த சர்ப்ரைஸ்

மனைவிக்கு தங்கத்தில் தாலி வாங்க ஆசை: 93 வயது முதியவருக்கு கிடைத்த சர்ப்ரைஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மஹாராஷ்டிராவில், 93 வயதிலும் தன் மனைவி மீதான அன்பில், தங்கத்தில் தாலி சங்கிலி வாங்கித்தர ஆசைப்பட்ட கணவரின் காதலுக்கு பரிசாக, அதை இலவசமாக வழங்கி நகைக்கடை உரிமையாளர் திக்குமுக்காட செய்துள்ளார். மஹாராஷ்டிராவின் ஜல்னா மாவட்டத்தில் உள்ள அம்போரா ஜஹாகிர் கிராமத்தின் எளிய விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த முதியவர் நிவ்ருத்தி ஷிண்டே, 93. அவரது மனைவி சாந்தாபாய். தற்போது ஆஷாதி ஏகாதசி கொண்டாட்டத்திற்காக பந்தர்பூருக்கு இருவரும் கால்நடையாக யாத்திரை மேற்கொண்டுள்ளனர்.அப்போது, சத்ரபதி சம்பாஜி நகரில் உள்ள நகைக்கடைக்கு இருவரும் சென்றனர். வெள்ளை குர்தா மற்றும் தொப்பி அணிந்தபடி ஏழ்மையான நிலையில் இருந்த அவரைப் பார்த்த ஊழியர்கள் யாசகம் கேட்டு வந்ததாக முதலில் நினைத்தனர். ஆனால் அந்த முதியவர், தன் மனைவிக்கு தாலி சங்கிலி வாங்க வேண்டும் என கூறியதை கேட்டு ஆச்சரியப்பட்டனர். தள்ளாத வயதிலும், முதியவரின் ஆழமான காதலைக் கண்டு அசந்து போன கடை உரிமையாளர், அவருக்கு அந்த நகையை பரிசாக அளித்தார். ''கடைக்கு வந்த வயதான தம்பதி, 1,120 ரூபாய் கொடுத்து, தங்கத்தில் தாலி சங்கிலி வேண்டும் என்றனர். அவரது அன்பு என்னை ஆச்சரியப்பட வைத்தது. ஆசிர்வாதத்தின் அடையாளமாக நான் அவரிடமிருந்து 20 ரூபாய் மட்டும் பெற்றுக் கொண்டு நகையை கொடுத்தேன்,'' என, கடை உரிமையாளர் கூறினார்.'இந்த ஜோடி எப்போதும் இணை பிரியாமல் இருப்பர். அவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். ஆனாலும் அவர்கள் பெரும்பாலும் தங்களைத் தாங்களே கவனித்துக் கொள்வர்' என உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். இந்த வயதான தம்பதியின், 'வீடியோ' இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Ramesh Sargam
ஜூன் 19, 2025 13:02

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்... - "அன்புக்கும் அடைத்து வைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே உள்ளே இருக்கும் அன்பைப் பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்". இந்த வயதான காலத்திலும் தன்னுடைய உண்மையான அன்பை வெளிப்படுத்திய அந்த முதியவருக்கு நமஸ்காரங்கள்.


Narayanan
ஜூன் 19, 2025 12:42

தம்பதிகளுக்கு நமஸ்காரம் .அந்த நகைக்கடைக்காரரின் உயர்ந்த உள்ளத்திற்கு தலை வணங்குகிறேன் . இறை நம்பிக்கை முழுவதுமாக இருந்தால் வயதும் நடக்கும் தூரமும் ஒரு பொருட்டே இல்லை. இறைவன் அவர்களுக்கு நம்பிக்கை அளித்து அரவணைப்பான். ஜெய் விட்டல் நாதா


rama adhavan
ஜூன் 19, 2025 10:14

தம்பதிகளையும், நகை கடைக்காரரையும் வணங்குகிறேன்.


p karuppaiah
ஜூன் 19, 2025 09:05

தங்க கடைக்காரருக்கு மனசும் தங்கத்தால் ஆனது, கடவுள் அவருக்கு நீண்ட ஆயுள் கொடுத்து அருளவேண்டும்


Columbus
ஜூன் 19, 2025 09:04

In these days of instance divorce and honey moon murder culture, it is heartening to see such love between old couple. Vaazhga Bharatham.


Indhiyan
ஜூன் 19, 2025 09:02

93 வயதில் பந்தர்பூரிலிருந்து அம்போரா ஜஹாங்கிர் வரை 300 கிமீ - எப்படி நடந்தார்களோ.


Kalyanaraman
ஜூன் 19, 2025 08:03

தங்கம் விற்கும் விலையில் அதை இலவசமாக கொடுத்த நகைக்கடை உரிமையாளரின் தயாள குணம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அருகாமையில் இருக்கும் கடைக்கு கூட வண்டியில் தான் போகிறோம். 93 வயதில் பாதயாத்திரை


பேசும் தமிழன்
ஜூன் 19, 2025 07:16

அனைத்து தம்பதியினரும் இவர்களை போல அன்புடன் இருக்க வாழ்த்துக்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை