உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிறுவனுக்கு 2 ஆண்டாக பாலியல் தொல்லை: அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கைது

சிறுவனுக்கு 2 ஆண்டாக பாலியல் தொல்லை: அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கைது

கண்ணூர் : மொபைல் செயலி மூலம் அறிமுகமான சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்த 10 பேரை காசர்கோடு போலீசார் கைது செய்துள்ளனர். அதில், ரயில்வே போலீஸ் அதிகாரி, கல்வி அதிகாரி மற்றும் தொழிலதிபர் உள்ளிட்டோர் அடங்குவர்.கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுவன், பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இச்சிறுவன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மொபைல் போனில், டேட்டிங் செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்துள்ளார். இதில், அறிமுகமான சிலர் அச்சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதனை யாருக்கும் சிறுவன் சொல்லாமல் இருந்துள்ளார்.கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீட்டில் இருந்து சந்தேகத்துக்கு இடமான ஒருவர் செல்வதையும், அவரது மொபைல்போனில் சந்தேகத்துக்கு இடமான வகையில் செயல்பாடுகள் இருந்ததையும் அச்சிறுவனின் தாயார் பார்த்துள்ளார்.இது குறித்து விசாரித்த போது, தனக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவு குறித்து சிறுவன் குறிப்பிட்டுள்ளார். உடனடியாக அவரது தாயார் போலீசில் புகார் அளித்தார். அவர்கள் குழந்தைகள் நல மையத்துக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சிறுவனுக்கு கவுன்சிலிங் அளித்தனர். அப்போது, சிறுவன் செயலியில் இணைந்தது, பாலியல் தொந்தரவு மற்றும் அதில் ஈடுபட்டது யார் என விளக்கினார். இது குறித்து அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.அப்போது, போக்சோ சட்டம் மற்றும் ஐபிசி 377 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், 10 பேரை கைது செய்துள்ளனர். இவர்களில் ரயில்வே போலீஸ் அதிகாரி, கல்வி அதிகாரி, தொழிலதிபர், உள்ளிட்ட 10 பேரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய எதிர்க்கட்சி தலைவர் ஒருவர் தலைமறைவாகி உள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு, எர்ணாகுளம் ஆகிய பகுதிகளுக்கும் சிறுவனை அழைத்து சென்று அவர்கள் பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டதாக தெரிவித்துள்ள போலீசார், 9 வழக்குகள் காசர்கோடில் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் மற்ற வழக்குகள் பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்ட இடங்களில் உள்ள போலீஸ் ஸ்டேசன்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

சந்திரசேகர்
செப் 17, 2025 07:55

இதுவும் ஒரு வகையான மனநோய்


நிக்கோல்தாம்சன்
செப் 16, 2025 22:28

பெயரை சொல்லாமல் எழுதியிருப்பதை பார்த்தல் பட்டிகளின் மர்மமே உருவான நபர்களோ ?


theruvasagan
செப் 16, 2025 22:02

16 வயசு பையன் தன்னோட மொபைல் போனில் 2 வருடம் முன்பு டேட்டிங் செயலியை பதிவிறக்கம் செய்தானாம். 14 வயசிலேயே இவன் பிஞ்சிலேயே பழுத்திருக்கிறான் என்பதை யாரும் முக்கியமாக பெத்தவங்க கவனிக்கலையே. பசங்களுக்கு மொபைல் போனை வாங்கிக் கொடுத்து எந்த கண்காணிப்பும் செலுத்தாத அவர்கள்தான் முதல் குற்றவாளிகள்.


தமிழ் நாட்டு அறிவாளி
செப் 16, 2025 21:43

கேரளா வளர்ந்த படிப்பறிவு நிறைந்த மாநிலம் என நினைத்தேன். எல்லாம் ஃப்ராடா இருக்குங்க ...


தாமரை மலர்கிறது
செப் 16, 2025 20:56

போலீஸ், கல்வி, தொழில் என்று அதிகாரத்தில் இருக்கும் அரசு மிருகங்கள் ஒரு சிறுவனை வேட்டையாடுவது பரிதாபத்திற்குரியது. அரசு உடனடியாக இந்த செயலியை முடக்க வேண்டும். இதற்காக தான் சீனா போன்று சமூகவலை தலங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் வேண்டும்.


Abdul Rahim
செப் 16, 2025 20:41

இந்த 10 மிருகங்களுக்கும் அந்த பாலகனை பார்க்கும்போது தங்கள் குழந்தைகள் நியாபகத்திற்கு வரவில்லையா குற்றம் நிரூபிக்கப்பட்டால் தயவு தாச்சிண்யம் பார்க்காமல் தூக்கில் போடுங்கள்....


Arunkumar,Ramnad
செப் 16, 2025 20:37

பயபுள்ளைகளுக்கு தக்க தண்டனை கொடுக்க வேண்டும்.


Vasan
செப் 16, 2025 20:12

தீர விசாரித்த பின் இந்த கொடுமை நிரூபிக்கப்பட்டால், அந்த 10 பேருக்கும் ஆயுள் தண்டனை கொடுங்கள். மன்னிக்க முடியாத குற்றம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை