மேலும் செய்திகள்
பெரும் தவறு!
4 hour(s) ago
கடற்படை குறித்து பாக்.,கிற்கு தகவல் அனுப்பியவர் கைது
4 hour(s) ago | 1
திருமலையில் தெய்வீக மூலிகை தோட்டம்
4 hour(s) ago
அரசு பள்ளியில் பழங்கள் தின விழா
7 hour(s) ago
அமராவதி, ஆந்திராவில் செம்மர கடத்தலை தடுக்க முயன்ற கான்ஸ்டபிளை, கடத்தல்காரர்கள் கார் ஏற்றி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.ஆந்திராவின் சேஷாசலம் வனப்பகுதிகளில் உள்ள செம்மரங்களை சட்டவிரோதமாக வெட்டி, கடத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் அன்னமய்யா மாவட்டத்தின் சென்னாபள்ளி கிராமத்தை ஒட்டி சேஷாசலம் வனப்பகுதி அமைந்துள்ளது.இங்கு, செம்மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி, வனத்துறையினர் உதவியுடன் கடத்தல் கும்பலை பிடிக்கும் நோக்கில் நேற்று, அப்பகுதியில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.இதையடுத்து, அந்த வழியாக வரும் வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, அங்கு வந்த காரை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றபோது, அருகில் நின்ற கான்ஸ்டபிள் கணேஷ் மீது மோதி விட்டு, அந்த கார் நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த அவரை, அருகில் உள்ள மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்ததில், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.இதையடுத்து, அந்த காரை பின்தொடர்ந்து சென்று போலீசார் விரட்டி பிடித்தனர். இதில், கான்ஸ்டபிள் மீது வாகனம் ஏற்றி கொலை செய்த இருவரை கைது செய்ததுடன், சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட செம்மர கட்டைகளையும் பறிமுதல் செய்தனர்.
4 hour(s) ago
4 hour(s) ago | 1
4 hour(s) ago
7 hour(s) ago