உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குழந்தைக்கு பெயர் சூட்டுவதில் குஸ்தி: தம்பதி தகராறுக்கு நீதிமன்றத்தில் தீர்வு

குழந்தைக்கு பெயர் சூட்டுவதில் குஸ்தி: தம்பதி தகராறுக்கு நீதிமன்றத்தில் தீர்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மைசூரு: ஆண் குழந்தைக்கு பெயர் சூட்டுவதில், தம்பதி இடையே ஏற்பட்ட பிரச்னையை நீதிமன்றமே பெயர் சூட்டி தீர்த்து வைத்தது.கர்நாடக மாநிலம், மைசூரு ஹுன்சூரில் வசிப்பவர் திவாகர். இவரது மனைவி அஸ்வினி. இரண்டு ஆண்டுகளுக்கு முன், இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு பெயர் சூட்டுவதில், தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.குழந்தைக்கு ஆதி என பெயர் சூட்ட திவாகர் விரும்பினார். அவரது மனைவி அஸ்வினியோ, வங்கிஷ் என பெயர் சூட்ட வேண்டும் என பிடிவாதம் பிடித்தார். இதனால், தம்பதி இடையே விரிசல் ஏற்பட்டது. அஸ்வினி தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.இந்நிலையில் கணவர் மீது, ஹுன்சூரின் எட்டாவது செஷன்ஸ் நீதிமன்றத்தில் அஸ்வினி வழக்கு தொடர்ந்தார். 'நான் தேர்வு செய்த பெயரை குழந்தைக்கு சூட்டும்படி கணவருக்கு உத்தரவிட வேண்டும்' என, வேண்டுகோள் விடுத்தார்.விசாரணை நடத்திய நீதிபதி கோவிந்தையா, 'குழந்தைக்கு பெயர் சூட்டுவதில் என்ன பிரச்னை? பெயரில் என்ன இருக்கிறது. குழந்தைக்கு நல்ல பண்பாடு, உயர் கல்வி தாருங்கள்' என, ஆலோசனை கூறினார்.விசாரணையின் போது, அரசு உதவி வக்கீல் சவும்யா, குழந்தைக்கு ஆர்யவர்தன் என்ற பெயரை சிபாரிசு செய்தார். இதே பெயரை நீதிபதி கோவிந்தையா, நேற்று முன்தினம் அனைவரின் முன்னிலையில் குழந்தைக்கு சூட்டி, இனிப்பு ஊட்டினார். இதற்கு பெற்றோரும் சம்மதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

ஆரூர் ரங்
டிச 16, 2024 17:00

ஜெயகடாவை பெயர் வைக்க கேட்கலாம்.


SUBRAMANIAN P
டிச 16, 2024 13:49

அந்த காலத்துல ஒரு கதை சொல்லுவாங்க. இதே போல ஒரு தம்பதிக்குள்ள பெயர் வைக்குறதுல சண்டை வந்துடுச்சாம். நடுவர் கிட்ட போனார்களாம். அந்த நடுவர், குப்பன் ல இருக்குற முதல் எழுத்தையும், சுப்பாயி ல இருக்குற முதல் எழுத்தையும் வைத்து ஒரு பெயர் வைத்து அனுப்பிவிட்டாராம்.


SUBRAMANIAN P
டிச 16, 2024 13:46

கோர்ட் அப்படியே அந்த தம்பதிகள் பெயரையும் மாத்தி அனுப்பி இருக்கனும். லூசுப்பயபுள்ளைக.


VSMani
டிச 16, 2024 13:05

ஆதி அஸ்வின் அல்லது அஸ்வின் ஆதி என்று பெயர் வைத்தால் போதுமானது கணவன் மனைவி இடையே அன்பு இருந்தால் ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்திருப்பார்கள். நானும் என் மனைவியும் எனது மகனுக்கு பெயர் வைப்பதில் சண்டையிட்டு ஒரு வருடம் பேசாமல் இருந்து நான் சொன்ன பெயர்தான் வைக்க வேண்டும் என்று பிடிவாதம் செய்து பெயர் வைத்தேன். ஒரு வருடம் என் மனைவிக்கும் மகனுக்கும் விசா கொடுக்காமல் திமிர்வாதமாக இருந்தேன். இப்போது ஒரு வருடம் வீணாக போய் விட்டதே என்று புலம்புகிறேன்.


swamy
டிச 16, 2024 11:37

ஆஹா தமிழ் பட காமெடி.....


Dhivya N S
டிச 16, 2024 11:22

ஆதிவங்கிஷ் என்று இரண்டு பேரையும் சேர்த்து வெச்சு இருக்கலாம். இரண்டு பேருக்கும் இல்லாமல் வேறு பெயர். இதுக்கெல்லாம் கோர்ட் நேரத்தை விணாக்கிட்டு


Anantharaman Srinivasan
டிச 16, 2024 11:05

எதுக்குத்தான் கோர்ட்க்கு போவது என்ற விவஸ்தையே யில்லாமல் போய்விட்டது.


ديفيد رافائيل
டிச 16, 2024 10:28

சூப்பர் நீதிபதி. இதை புத்திசாலித்தனமாக கையாண்டு யாருக்கும் பாதகமில்லாமல் தீர்ப்பு வழங்கியுள்ளார்.


sridhar
டிச 16, 2024 10:04

அர்த்தம் இருக்கோ இல்லையோ பெயரில் ஷ் வரவேண்டும், இது என்ன மதியீனம் .


Indhuindian
டிச 16, 2024 08:43

கோர்ட்டுக்கு போனதுக்கு பதிலா ஏர்வாடிக்கு போயிருக்கணும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை