உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முதல்வர் காலடியில் விழுந்து நொறுங்கிய ட்ரோன்

முதல்வர் காலடியில் விழுந்து நொறுங்கிய ட்ரோன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புவனேஸ்வர்: ஒடிசாவில், கள ஆய்வுக்கு சென்ற முதல்வர் மோகன் சரண் மஜியை படம் எடுக்க அனுப்பப்பட்ட ட்ரோன், அவரின் காலருகே விழுந்து நொறுங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவில், முதல்வர் மோகன் சரண் மஜி தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. இங்குள்ள ஜார்சுகுடா மாவட்டத்தில், முதல்வர் மோகன் கடந்த 2ம் தேதி ஆய்வு மேற்கொண்டார். புருணஸ்பதி பகுதியில் உள்ள ஜாதேஸ்வர் கோவிலுக்கு அவர் சென்ற போது, தலைக்கு மேலே பறந்து கொண்டிருந்த, 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா சிறிய விமானம், மோகன் காலடியில் திடீரென விழுந்து நொறுங்கியது. இதைத் தொடர்ந்து சுதாரித்த முதல்வரின் பாதுகாப்பு அதிகாரிகள், ட்ரோனை ஆய்வு செய்து அப்புறப்படுத்தினர். ஆய்வுக்கு வந்த முதல்வர் மற்றும் அதிகாரிகளை படம் எடுக்க மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ட்ரோன், தொழில்நுட்ப கோளாறு காரணமாக விழுந்து நொறுங்கியது என, விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த 2ம் தேதி நடந்த இந்த சம்பவம், சமூக வலைதளங்களில் வீடியோவாக வெளியானதை அடுத்து தற்போது வெளிச்சத்துக்கு வந்தது. பாதுகாப்பு குறைபாடு காரணமாகவே, இந்த விபத்து நடந்ததாக கூறப்பட்ட நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

sankaranarayanan
ஜன 06, 2025 11:07

இதில் எதோ மர்மம் உள்ளது முதல்வரை படம் எடுக்க வந்த ட்ரோன் நொறுங்கி அவரது காலில் விழுந்தது என்றால் அது சற்றே அவர்மிது விழுந்திருந்தால் என்ன ஆயிருக்கும் எதோ சதி இதில் உடனே தீவிரமாக காலதாமதம் இல்லாமல் விசாரிக்க வேண்டும் உண்மை வெளிப்படும்


Ganesh
ஜன 06, 2025 10:29

உலகம் முழுவதும் வளர்ந்து வரும் தீவிரவாத சூழலில் இந்த நீகழ்வை மிகவும் சீரியஸ் ஆக பார்க்க வேண்டும்... இதை அனுமதித்த அதிகாரிகளை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும்... இதை பண்ணினால் தான் இதனுடைய விபரீதம் அனைவருக்கும் புரியும்


Barakat Ali
ஜன 06, 2025 10:25

எங்க மோதலுவரு காலுல ஏற்கனவே சட்டம் ஒழுங்கு விழுந்து நொறுங்கிக் கிடக்கு ....


சமீபத்திய செய்தி