உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போலீஸ் அதிகாரி கன்னத்தில் ‛பளார் விட்ட விமான நிறுவன பெண் ஊழியர்

போலீஸ் அதிகாரி கன்னத்தில் ‛பளார் விட்ட விமான நிறுவன பெண் ஊழியர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் சி.ஐ.எஸ்.எப். போலீஸ் அதிகாரி கன்னத்தில் தனியார் விமான நிறுவன பெண் ஊழியர் அறைந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.ஸ்பைஸ் ஜெட் என்ற தனியார் நிறுவன பெண் ஊழியர் அனுராதா ராணி, இவர் இன்று ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் சி.ஐ.எஸ்.எப். எனப்படும் மத்திய கம்பெனிகள் பாதுகாப்புபடை கட்டுப்பாட்டில் உள்ள நுழைவு வாயிலுக்குள் அத்துமீறி நுழைய முயன்றதாக கூறப்படுகிறது. உடன் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கிரிராஜ் பிரசாத் என்ற சி.ஐ.எஸ்.எப். உதவி காவல் ஆய்வாளர், அப்பெண் ஊழியரை தடுத்து ஏதோ வார்த்தையில் திட்டியதாக கூறப்படுகிறது.இதனால் ஆத்திரமடைந்த பெண் ஊழியர் உதவி காவல் ஆய்வாளரிடம் வாக்குவாதம் செய்ததுடன் பலர் முன் அவரது கன்னத்தில் அறைந்தார். இதன் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக பெண் ஊழியரை சக போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.பெண் ஊழியர் கூறுகையில், தன்னை ஆபாச வார்த்தைகளால் திட்டியதால் கன்னத்தில் அறைந்ததாக கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூலை 12, 2024 11:02

ஒரு எம்பியை விமான நிலைய காவல்துறை பெண் அதிகாரி அடித்தார். இது பழைய செய்தி. விமான நிலை காவல் துறை அதிகாரியை ஒரு விமான பெண் அடித்தார். இது தற்போதைய செய்தி. அடுத்து வரவிருக்கும் செய்தி விமான பணி பெண் அல்லது பைலட்டை விமான பயணி அறைந்தார்.


Kasimani Baskaran
ஜூலை 12, 2024 05:30

அடித்து மீறி நுழைந்தால் ஆபத்தில் கூட முடியலாம் என்பதை இந்த பெண் ஊழியர் நினைத்துப்பார்க்க வேண்டும். அந்த ஊழியர் பொறுமை சாலி என்பதால் தப்பித்தார்.


Kalyanaraman
ஜூலை 12, 2024 00:13

ஸ்பைஸ்ஜெட் தமிழகத்தின் கலாநிதி - தயாநிதி மாறன் சகோதரர்களுக்கு சொந்தமான நிறுவனமா?


Natarajan Ramanathan
ஜூலை 11, 2024 23:40

அறைந்தது மிக மிக தவறான செயல். அந்த பெண்ணை பணிநீக்கம் செய்வதே சரியானது.


Rajinikanth
ஜூலை 11, 2024 22:48

அதிகாரத்தில் உள்ளவர்களும் மக்களிடம் பணிவாக கண்ணியமாகதான் பேசவேண்டும். ஆனால் அறைந்தது சரி என்று கூறவில்லை.


Anantharaman Srinivasan
ஜூலை 11, 2024 23:43

யார் சரி யார் தவறென்று உனக்குத்தெரியுமா.. ? தேவையில்லாத கமெண்ட்ஸ்.


Senthoora
ஜூலை 12, 2024 06:37

ஒரு பெண், இனொரு அதிகாரத்தில் இருக்கும் ஒரு பெண்ணை ஆபாசவார்த்தியால் திட்டலாமா? ஒருவருக்கு ஒருவர் மன்னிப்பு கேட்டுபோவது நல்லது.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை