மேலும் செய்திகள்
எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது
08-Sep-2024
கோல்கட்டா, வட கிழக்கு மாநிலமான அசாமின் குவஹாத்தி நகரில் இருந்து மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி பகுதிக்கு சரக்கு ரயில் காலிப்பெட்டிகளுடன் நேற்று காலை சென்று கொண்டிருந்தது.சிலிகுரி அருகே புதிய ஜல்பைகுரி ரயில் நிலையம் நோக்கிச் சென்றபோது, திடீரென ஐந்து பெட்டிகள் தடம் புரண்டு விபத்தில் சிக்கின. இதில், ரயில் வழித்தடம் அருகே இருந்த மின்கம்பங்கள் சேதமடைந்தன. ரயில் விபத்து காரணமாக வட கிழக்கு மாநிலங்களுக்கு செல்லும் சில ரயில்கள் வேறு வழித்தடத்தில் திருப்பி விடப்பட்டன.விபத்து குறித்து அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ரயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். தடம்புரண்ட பெட்டிகளை அகற்றி சீரமைத்தனர். ரயில் தடம்புரண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
08-Sep-2024