உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நினைத்தாலே நெஞ்சு பதறும் கொடூரம்; மரண தண்டனை விதித்தது மும்பை கோர்ட்

நினைத்தாலே நெஞ்சு பதறும் கொடூரம்; மரண தண்டனை விதித்தது மும்பை கோர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: தாயாரை கொலை செய்து, உடல் பாகங்களை வறுத்து சாப்பிட்ட நபருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மும்பை ஐகோர்ட் உறுதி செய்துள்ளது.மஹாராஷ்டிரா மாநிலம் கோல்ஹாப்பூர் பகுதியை சேர்ந்தவர் சுனில். இவர் கடந்த 2017ம் ஆண்டு தாயார் எல்லம்மாவை கொலை செய்துள்ளார். அவரது உடல் பாகங்களை தனியே பிரித்து எடுத்து வறுவல் செய்து சாப்பிட்டு உள்ளார். மது அருந்த பணம் தராத காரணத்தினால் கொலை செய்ததாக அரசு தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. விசாரித்த விசாரணை நீதிமன்றம் இது அரிதிலும் அரிதான வழக்கு எனக்கூறி 2021ல் சுனிலுக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியது. தற்போது குற்றவாளி புனே சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.இதனை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் சுனில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் ரேவதி மற்றும் பிரித்விராஜ் சவான் அமர்வு பிறப்பித்த உத்தரவு:இந்த வழக்கு அரிதிலும் அரிதான வழக்கு. குற்றவாளி தாயாரை கொலை செய்ததுடன் மட்டுமல்லாமல், அவரது சிறுநீரகம், மூளை, இதயம் மற்றும் கல்லீரல் ஆகியவற்றை வறுத்து சாப்பிட்டு உள்ளார். இது நரமாமிசம் சாப்பிட்டு உள்ளதை காட்டுகிறது. இவருக்கு ஆயுள் தண்டனை வழங்கினால், சிறையிலும் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவார் எனக்கூறி விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Lion Drsekar
அக் 02, 2024 13:40

என்ன உத்தரவு வந்தாலும் அரசியல் பின்புலம் இருந்தால் இவர் எத்தினை ஆண்டுகள் ஆனாலும் வெளியில் வருவது உறுதி, மேலும் தவறு செய்தவர்கள் திருந்தும் வரை அவர்களுக்கு விடுதலை செய்துகொண்டே இருப்பதை உலகம் காண்கிறது, மாண்புமிகு திருடர்கள் எத்தினை முறை குண்டர்சட்டம், கொலை, கொள்ளை, ..... மீண்டும் கைது நடவடிக்கை ,விடுதலை, கைது, விடுதலை, இதுதான் நடைமுறை,


கோபாலகிருஷ்ணன்
அக் 02, 2024 09:39

குடிப்பதற்கு பணம் கொடுக்கவில்லை என்று காரணத்திற்காக கொன்றவன் வழக்கை வாதாட பணம் எங்கிருந்து வந்தது தவிர மனநிலை சரியில்லை, கருணை மனு, மரண தண்டனை ஒழிப்பு அமைப்புகள், செஞ்சிலுவை சங்கம் என்று நிறைய வாய்ப்புகள் இருக்கு....அவரை கவலைபடாமல் சிறையில் இருக்க சொல்லுங்கள்....!!!


நிக்கோல்தாம்சன்
அக் 02, 2024 05:59

மது அருந்த ? மது ஒருவனின் மனநிலையை இவ்வளவு கொடூரமாக்குகிறது என்றால் அந்த மதுவுக்கும் ??? ஓஹோ அதுதான் அரசாங்கங்களின் செல்லப்பிள்ளை ஆயிற்றே


spr
அக் 02, 2024 00:17

யாரோ ஒரு நீதிபதி சிறைச்சாலைகள் சீர்திருத்தப்பள்ளிகளாக இருக்க வேண்டும் குற்றம் செய்தவருக்கு கொடிய தண்டனை கொடுக்கக்கூடாது என்கிறாரே அவரை இவனிடம் பிடித்துக் கொடுங்கள்


Mohanakrishnan
அக் 01, 2024 23:12

Kapil and sungavi arethere to get bail and release by arguing that the flush was not human but a goat


Anantharaman Srinivasan
அக் 01, 2024 22:52

புது விதமான மரண தண்டனை கொடுங்க .. உயிருடன் பத்து சிங்கங்களுக்கு இரையாக்குங்கள்.


சிவம்
அக் 01, 2024 22:05

ஒரு விஷயத்தை நினைவு கூறுகிறேன். கொலைகாரன், கொள்ளைக்காரன் போன்ற சமுதாய எதிரிகள், தேசத்திற்கு எதிராக செயல்படும் தீவிரவாதிகள் போன்ற தேச துரோகிகளை, "அவர் சென்றார், அவர் குற்றவாளி, போலிசிடமிருந்து தப்பினார்", போன்ற மரியாதைகுறிய வார்த்தைகளை பயன் படுத்த வேண்டிய அவசியம் என்ன? நல்லவதலுக்க கொடுக்கப்படும் அனைத்து மரியாதையையும், கிரிமினல் களுக்கும் கொடுக்க வேண்டுமா! அப்புறம் இருவருக்கும் என்ன வித்தியாசம். தயவு செய்து மாற்றி கொள்ளுங்கள்.


வைகுண்டேஸ்வரன்
அக் 01, 2024 21:40

ரங்கு ஏன் எதுக்கெடுத்தாலும் திமுக, ஸ்டாலின் கிட்ட தான் போறார்?????


Jagan (Proud Sangi)
அக் 01, 2024 21:29

மெண்டல் கேசா ? நல்ல மன நிலையில் உள்ள எவரும் இதை செய்வார்களா என்பது சந்தேகம் தான்.


ஆரூர் ரங்
அக் 01, 2024 21:18

ஏழு பேர் விடுதலைக்கு குரல் கொடுத்த கூட்டம் இவனையும் தப்பிக்க விட செய்யக் கோரும். பின்னர் விடியல் விருந்துதான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை