உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாழ்க்கையில் வசந்தம் ஏற்படுத்திய சங்கீதம்

வாழ்க்கையில் வசந்தம் ஏற்படுத்திய சங்கீதம்

பிரச்னைகள் ஏற்படும்போது, அது பற்றியே கவலைப்பட்டு நாட்களை கடத்தாமல், பிரச்னைகளை உதைத்துத் தள்ளிவிட்டு, தொடர்ந்து முயற்சித்தால் வாழ்க்கையில் வெற்றி தேடி வரும் என்பதற்கு, ஒரு இளைஞர் முன்னுதாரணமாக திகழ்கிறார்.பணம், பதவி, செல்வாக்கு என, அனைத்தும் அளவுக்கு அதிகமாக இருந்தாலும், ஏதாவது ஒரு குறையை கண்டுபிடித்து, பிடிப்பில்லாமல் வாழ்க்கை நடத்துவர். வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் பலரும் காலம் கடத்துகின்றனர்.ஆனால் சாதிக்க வேண்டும் என்ற வைராக்கியம் இருந்தால், எப்படிப்பட்ட சவால்களையும் துச்சமாக நினைத்து, வாழ்க்கையில் தாங்கள் நினைத்ததை சாதிப்பர். இதற்கு கோவிந்தகவுடா, 27, சிறந்த உதாரணம்.இரண்டு கைகளும் இல்லாத நிலையில், மனம் தளராமல் சாதனை செய்து, மற்றவருக்கு முன்னுதாரணமாக வாழ்கிறார். தன் குரல் வளத்தால் அனைவரையும் கவர்ந்துள்ளார்.உத்தரகன்னடா, குமட்டாவின் பளலே கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்த கவுடா. ஒரு விபத்தில் தன் இரண்டு கைகளை இழந்தார். 'கைகள் போனதால், வாழ்க்கையே போய்விட்டது' என, சோர்ந்து போய் அவர் அமர்ந்துவிடவில்லை. மாறாக சங்கீதத்தில் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். தன் சொந்த முயற்சியால் பாடகரானார்.ஆர்க்கெஸ்ட்ராவில் பாடகராக இருக்கிறார். தன் இனிமையான குரலால், மக்களை கட்டிப் போடுகிறார். இவரது பாடலை மக்கள் விரும்பி கேட்கின்றனர். குமட்டா, அங்கோலா உட்பட, 30க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.அவருக்கு விளையாட்டு வீரராக வேண்டும் என்ற கனவு இருந்தது. வாலிபால், கிரிக்கெட் அவருக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டு. ஆனால் 2011ல் நடந்த விபத்தில் கைகளை இழந்ததால், அவரது கனவு நிறைவேறவில்லை.சில நாட்கள் தொய்வடைந்திருந்த அவருக்கு உயிர் கொடுத்தது சங்கீதம். ஐந்து ஆண்டு சங்கீதம் கற்றார்.கோவிந்த கவுடாவின் தாய், தந்தை நெடுஞ்சாலை அருகில், ஒரு பெட்டிக்கடை வைத்து, வாழ்க்கை நடத்துகின்றனர். வீட்டின் அருகில் சிறிதளவு நிலம் உள்ளது. இதில் விவசாயம் செய்கின்றனர். இவர்களின் மகன் கோவிந்த கவுடா, பாடகராக வளர்ந்து வருகிறார். விரைவில் திரைப்பட பின்னணி பாடகரானாலும் ஆச்சரியப்பட முடியாது - நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி