உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தற்கொலைக்கு துாண்டிய மனைவி பேச்சு இன்ஜினியர் எழுதிய கடிதத்தில் பகீர்

தற்கொலைக்கு துாண்டிய மனைவி பேச்சு இன்ஜினியர் எழுதிய கடிதத்தில் பகீர்

புதுடில்லி, உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர் அதுல் சுபாஷ், 34. கர்நாடகாவின் பெங்களூரில் மென்பொருள் இன்ஜினியராக பணியாற்றினார். மனைவி நிகிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். விவாகரத்து வழக்கு உ.பி.,யின் ஜான்புர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.இந்நிலையில், பெங்களூரில் உள்ள வீட்டில் அதுல் சுபாஷ் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக, 24 பக்க கடிதம் மற்றும் 90 நிமிட வீடியோ பதிவு வாயிலாக தற்கொலை முடிவுக்கான காரணங்களை தெரிவித்து உள்ளார்.அதில், மனைவி நிகிதா, மாமியார் நிஷா, மைத்துனர் அனுராக் மற்றும் மனைவியின் தாய்மாமா சுஷில் ஆகியோர் அளித்த மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக தெரிவித்து இருந்தார்.மேலும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது:ஜான்புர் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நடந்து கொண்டிருந்தபோது, 'கணவர் மீது மனைவி சுமத்தும் பொய்யான புகார்களால் லட்சக்கணக்கான அப்பாவி கணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்' என, நீதிபதி ரீட்டா கவுஷிக் இடம் தெரிவித்தேன்.உடனே என் மனைவி, 'நீ ஏன் தற்கொலை செய்து சாகக் கூடாது' என்றார்.இதைக் கேட்டு சிரித்த நீதிபதி, நிகிதாவை நீதிமன்ற அறையை விட்டு செல்லும்படி கூறினார். பின், இந்த வழக்கை சுமூகமாக முடித்து வைக்க என்னிடம் 5 லட்சம் ரூபாய் கேட்டார். மற்றொரு சந்தர்ப்பத்தில் என் மாமியர் நிஷா, 'நீ இன்னும் தற்கொலை செய்து கொண்டு சாகவில்லையா? இன்று செத்துவிட்டாய் என செய்தி வரும் என்று எதிர்பார்த்தேன்' என்றார். என் குடும்பம் மீதும், நீதித்துறை மீதும் நம்பிக்கை இழந்ததை அடுத்து தற்கொலை முடிவை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டேன்.இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.இதற்கிடையே, நிகிதா மற்றும் அவரது தாயாரை தேடி, கர்நாடகா போலீசார் உத்தர பிரதேசத்துக்கு சென்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
டிச 14, 2024 06:28

இங்கு யாருமே நீதிபதி ரூபாய் ஜந்து இலட்சம் கேட்டார் வழக்கை சுமுகமாக முடிக்க என்பதின் இது வரை கருத்து தெரிவிக்காதது. நீதிபதி ஜந்து இலட்சம் இலஞ்சம் கேட்டு உள்ளார். நமது நாட்டில் நீதிமன்றங்கள் நிலைமை இது தான். சாவிலும் கூட பணம் கேட்டு பிணத்தை கூட தின்பதற்கு தயங்காத அளவு மனிதர்கள் மாறி விட்டார்கள். மனித குலம் எங்கே சென்று கொண்டு உள்ளது? இந்த நீதிமன்றங்களிடம் நியாயம் எப்படி எதிர்பார்க்க முடியும்? முடிந்த வரை சாட்சிகாரன் காலில் விழுவதை விட சண்டைகாரன் காலில் விழுவது மேல்.


KAVITHA
டிச 13, 2024 11:31

எதற்கு சார் சாகனும் ஒரு முறை பிறக்கிறோம் வாழனும் சார் வாழ்ந்து காட்டணும் சார்


AMLA ASOKAN
டிச 13, 2024 11:18

இந்திய நீதிமன்றங்களின் மூலம் விவாகரத்து பெறுவது குறைந்தது 6 ஆண்டுகள் ஆகும் . வழக்கு முடியும் வரை தன்னை விட்டு பிரிந்து வாழும் மனைவிக்கு மாதம் குறைந்தது 10000 TO 3 லட்சம் வரை கணவன் அளிக்க வேண்டும் என நீதி மன்றம் உத்தரவிடுகிறது . மனைவியும் கிடைத்த பணத்தை வைத்துக்கொண்டு கணவனுக்கு எதிராக தன் செலவுக்கும் , வக்கீலுக்கு FEES ம் கொடுக்கிறாள் . மனவருத்தத்தினால் பிரியும் முடிவை எடுத்த மனைவி வரதட்சணை கொடுமையென வக்கீல் ஆலோசனையில் வழக்கு தொடுத்து நாளது தேதி வரை கணவனாக உள்ளவனை துன்புறுத்தி மேலும் ஜீவனாம்சம் என ஒரு பெரிய தொகையையும் அடைய தான் விரும்புகிறாளே , அல்லாமல் சமரசம் செய்து கொள்ள விரும்புவதே இல்லை . அதனால் தான் இந்த வாலிபரும் தற்கொலை செய்துள்ளார் . முஸ்லிம்களிடையே 3 மாத இடைவெளியில் ஒரு தலாக் என 3 தலாக்குகளை கூறி , அந்த பகுதி ஜமாத்தார்கள் முன்னிலையில் ஒரு வருடத்திற்குள்ளாக இருவரும் பிரிந்து விடுகிறார்கள் . முஸ்லீம் விவாகரத்து வழக்குகள் நீதிமன்றங்களில் மிக மிக குறைவு . நீதிமன்றங்கள் இத்தகு வழக்குகளுக்கு வாய்தா வழங்காமல் விரைவாக தீர்ப்புகள் வழங்க வேண்டும் . இருவரும் இளம் வயதிலேயே மறுமணம் செய்து கொள்ளவும் ஏதுவாகும் .


Shiv G
டிச 13, 2024 11:04

இந்த சிக்கல்களுக்கு சிறந்த தீர்வு என்பது திருமணத்தை தவிர்த்து, உங்களுக்கே உரிய வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ்வது. உங்கள் வாழ்க்கையை நீங்கள் மனதார மகிழ்ச்சியான தருணங்களால் நிரப்பி, கவலையற்ற ஒரு வாழ்க்கையை அனுபவிக்கலாம். நீங்கள் உங்களது சம்பாதிப்பையும் வாழ்க்கையையும் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பயன்படுத்தி, யாருக்கும் விளக்கமளிக்க தேவையில்லை. உங்கள் நேரத்தையும் ஆற்றலையும் உங்கள் பெற்றோர்களுக்காகவும் உங்களுக்கு தெரிந்த நலவாழ்விற்காகவும், மற்றும் உதவியை தேவைப்படுவோருக்காக செலவிடுங்கள். இன்றைய உலகில் வாழ்க்கை மிகச் சுருக்கமானது எனவே, உங்கள் நேரத்தை முழுமையாக பயன்படுத்தி, உங்கள் சுயமரியாதையைப் பேணி, உங்கள் மகிழ்ச்சியைத் தேடுங்கள். Its your LIFE & Your Hardwork & Its Your Freedom , dont loose your life for some one who came in middle of your life .


Madras Madra
டிச 13, 2024 11:55

இவ்வளவு கேவலமாக எப்படி ஒருவரால் சிந்திக்க முடிகிறது


Thamizh Kumaran
டிச 13, 2024 10:17

நீதிமன்றம் அவரது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினரை கண்டிப்பதுடன், வழக்கம் போல் அவர்களுக்கும் பொது மக்களுக்கும் சில தேவையற்ற ஆலோசனைகளை வழங்கும். போதிய ஆதாரம் இல்லாததால் வழக்கு தள்ளுபடி செய்யப்படும். அவரது மரணம் செய்திகளில் சில நாட்கள் பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும். அவரது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றியிருப்பார்கள். அவர் தனது வழக்கை நடத்த புரோபோனோ வழக்கறிஞர்களைப் பயன்படுத்தியிருக்க வேண்டும். அவரது முடிவு பரிதாபம்.


வைகுண்டேஸ்வரன்
டிச 13, 2024 09:54

சிலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். பலரும் நடைப்பிணமாக வாழ்கிறார்கள்.


vbs manian
டிச 13, 2024 09:50

இன்றைய வரதட்சிணை விவாகரத்து சட்டங்கள் ஆண்களுக்கு எதிராக உள்ளன. கணவன் குற்றவாளியே என்று முன்பே முடிவு செய்து விடுகிறார்கள். சட்டம் ஆண் பெண் இருவருக்கும் சமமாக இருக்க வேண்டும்.திருமண உறவை புதுப்பிக்க வேண்டும் நீர்த்து போக செய்யக்கூடாது. கணவன் மனைவி குழந்தை எல்லோரும் மீளா துயரத்தில் தள்ளப்படுகின்றனர். வாழ்க்கை வாழ்வதற்கே நொந்து நூலாவதற்கு அல்ல.


orange தமிழன்
டிச 13, 2024 09:47

இன்னும் சில நாட்களில் இந்த கேசில் தீடீர் திருப்பம் என்று இறந்தவர் மீதே பழி வரும்...(நீதிபதி சிரித்தார்......இதை படிக்கும் போது மிகுந்த மன வேதனையாக இருந்தது)


sankaran
டிச 13, 2024 08:52

3 வயசில் இருந்து கஷ்டப்பட்டு படித்து, 10 போர்டு எக்ஸாம், பிளஸ் 2 போர்டு எக்ஸாம், நீட் எண்ட்ரன்ஸ் எக்ஸாம், IIT JEE எண்ட்ரன்ஸ் எக்ஸாம், வேலைக்கு இண்டெர்வியூ, இதெல்லாம் கடந்து வேலை பார்த்து, அப்புறம் income tax, GST, வீட்டு வாடகை, மொபைல் பில், எலக்ட்ரிசிட்டி பில், கல்யாணம் பண்ணி, பொண்டாட்டி bills எல்லாம் கட்டி, வீட்ல வயசான அப்பா , அம்மா இருந்த , அவர்களின் மருத்துவ செலவுகள் , குழந்தைகள் பிறந்தால் அதற்கு செலவு , அப்புறம் ஸ்கூல் டியூஷன் பீஸ் , விவாகரத்து ஆனால் , காம்பென்சேஷன் , சொத்து பகிர்வு .... ஆண்களே கொஞ்சம் யோசியுங்கள் .. எல்லாமே உங்களுக்கு எதிராக உள்ளது ...பழைய காலமே தேவலை ...


VENKATASUBRAMANIAN
டிச 13, 2024 07:44

இதுதான் கலாச்சார சீரழிவு. பெண் சுதந்திரம் என்ற பெயரில் இவ்வாறு நடக்கிறது. மேலும் பெண்கள் தவறாக சட்டத்தை பயன் படுத்துகிறார்கள். இதை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும்.


புதிய வீடியோ