உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹோட்டல்களில் தங்கி டிவி மட்டும் திருடியவர் கைது

ஹோட்டல்களில் தங்கி டிவி மட்டும் திருடியவர் கைது

புதுச்சேரி:ஆதாரில் புகைப்படத்தை மாற்றி, ஹோட்டல்களில் அறை எடுத்து தங்கி, எல்.இ.டி., -'டிவி'களை மட்டும் திருடிச் சென்ற திருக்கோவிலுார் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரி, உருளையன்பேட்டை, அம்மன் கோவில் வீதி, மாஸ் ஹோட்டல் எதிர்புறம், எஸ்4 என்ற தனியார் கெஸ்ட் ஹவுஸ் உள்ளது. இங்கு, ஜன., 26ம் தேதி, 25 வயது நபர் அறை எடுத்து தங்கினார்.மறுநாள் 27ம் தேதி அவரது அறை கதவு திறந்து கிடந்தது. அறையில் இருந்த எல்.இ.டி., ஆண்ட்ராய்டு டிவி திருடு போயிருந்தது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், அந்த வாலிபர் 'டிவி'யை திருடி செல்வது தெரியவந்தது.உருளையன்பேட்டை போலீசார் நடத்திய விசாரணையில், காரைக்கால், திருநள்ளாரைச் சேர்ந்த தினேஷ், 25, என, போலியாக ஆதார் கார்டு முகவரி கொடுத்து அறை எடுத்து தங்கியது தெரியவந்தது.தனிப்படை போலீசார், டிவி திருடன் கடந்து சென்ற சாலைகளில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், அந்த நபர், விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலுார், மணம்பூண்டியை சேர்ந்த விக்கி, 23, என்பதும், பண்ருட்டி, வடலுார், திருவண்ணாமலை பகுதி லாட்ஜ்களில் அறை எடுத்து தங்கி டிவி திருடியதும் தெரியவந்தது.திருடிய 'டிவி'க்களை உள்ளூர் கேபிள் ஆப்பரேட்டர்களிடம் குறைந்த விலைக்கு விற்பனை செய்துள்ளார். புதுச்சேரி பஸ் நிலையத்தில் சுற்றித்திரிந்த விக்கியை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம், 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 10 எல்.இ.டி., ஆண்ட்ராய்டு 'டிவி'க்கள், ஒரு மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி