மேலும் செய்திகள்
பைக் வெடித்த விபத்து மேலும் ஒருவர் பலி
14-Sep-2024
கீதா காலனி:டில்லி நடைபாதையில் துாங்கிக் கொண்டிருந்த இருவர் மீது வேகமாக கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.உத்தர பிரதேசம் லக்னோவை சேர்ந்தவர்கள் சோனு, 40, முகமது இஸ்லாம், 38. டில்லியில் வசித்து வரும் கூலித்தொழிலாளிகள். இவர்கள் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கீதா காலனி நடைபாதையில் துாங்கினர்.நேற்று அதிகாலை அதிவேகமாக வந்த கார் ஒன்று, நடைபாதையில் துாங்கிக் கொண்டிருந்த இருவர் மீதும் ஏறி நின்றது. இருவரின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.விபத்தை ஏற்படுத்தி காரின் ஓட்டுனர் தப்பி ஓட முயன்றார். அவரை மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். படுகாயமடைந்த சோனு, முகமது இஸ்லாம் ஆகிய இருவரும் மீட்கப்பட்டு எஸ்.டி.என்., மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.அங்கு சிகிச்சை பலனின்றி சோனு உயிரிழந்தார். இஸ்லாமுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, காரை ஓட்டி வந்த சாஸ்திரி நகரைச் சேர்ந்த ராகுல் குமார், 38, என்பவரை கைது செய்தனர்.விபத்தை ஏற்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணை நடக்கிறது.
14-Sep-2024