மெட்ரோ ரயில் நிலையங்களில் ஓவியங்கள் வரைய திட்டம்
பெங்களூரு: நகரின் எட்டு மெட்ரோ நிலையங்களின் சுவர்களில், கர்நாடக வரலாற்றை விவரிக்கும் ஓவியங்கள் வரையும் பணிகள் மும்முரமாக நடக்கின்றன.பெங்களூரு மெட்ரோ நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:நகரின் எட்டு மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் இரண்டு முக்கியமான தனியார் சுவர்களின் மீது அழகான ஓவியங்கள் வரைய திட்டம் வகுக்கப்பட்டது. ஆன்பாக்சிங் பெங்களூரு பவுண்டேஷன் ஒருங்கிணைப்பில், பத்து சுவர்கள், ஓவியங்கள் மூலம் அலங்கரிக்கப்படும்.விஸ்வேஸ்வரய்யா சென்ட்ரல் கல்லுாரி மெட்ரோ ரயில் நிலையம், ஜெயநகர் மெட்ரோ ரயில் நிலையம், ஆர்.வி.சாலை, ஜே.பி.நகர், யஷ்வந்த்பூர், ஹலசூரு, ஸ்ரீராமபுரம் மெட்ரோ நிலையங்கள் உட்பட எட்டு மெட்ரோ நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.சர்ச் தெரு மற்றும் சயின்ஸ் கேலரி சுவர்களின் மீதும் ஓவியங்கள் வரையப்படும். பெங்களூரின் வரலாறு, பாரம்பரியம், இயற்கை அழகு என, பல விஷயங்கள் ஓவியத்தில் இடம் பெறும்.நகரை அழகாக்குவதுடன், பெங்களூரின் வரலாற்றை மக்களுக்கு அறிமுகம் செய்வதும், எங்களின் நோக்கமாகும். பிரபலமான ஓவிய கலைஞர்கள் பொறுப்பேற்றுள்ளனர். இவர்கள் பணியை துவக்கி உள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.