உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தர்மஸ்தலாவில் எலும்புகள்: தோண்டும் பணியில் திடுக் திருப்பம்

தர்மஸ்தலாவில் எலும்புகள்: தோண்டும் பணியில் திடுக் திருப்பம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: கர்நாடகாவின் தர்மஸ்தலாவில், பெண்கள் உடல்களை புதைத்ததாக கூறப்படும், ஆறாவது இடத்தில் தோண்டிய போது, 12 எலும்புகள், ஒரு மண்டை ஓடு சிக்கியதால், போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். கர்நாடக மாநிலம், தட்சிண கன்னடாவின் தர்மஸ்தலா நேத்ராவதி ஆற்றங்கரையில், பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட 100க்கும் மேற்பட்ட பெண்களின் உடல்களை புதைத்ததாக, தர்மஸ்தலா மஞ்சுநாதா கோவிலில் வேலை செய்த முன்னாள் துாய்மை பணியாளர் போலீசில் புகார் அளித்தார். இது குறித்து விசாரிக்கும் எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழு, நேத்ராவதி ஆற்றங்கரையோரம், புகார்தாரர் சுட்டிக்காட்டிய 13 இடங்களை அடையாளமிட்டது. கடந்த 29ம் தேதி ஒரு இடத்திலும், நேற்று முன்தினம், நான்கு இடங்களிலும், 6 அடி ஆழத்திற்கு குழி தோண்டியும் எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில், புகார்தாரரால் அடையாளம் காட்டப்பட்ட ஆறாவது இடத்தில், நேற்று காலை 11:00 மணிக்கு தோண்டும் பணி துவங்கியது. 6 அடிக்கு தோண்டிய போது, 12 எலும்புகள், ஒரு மண்டை ஓடு, உள்ளாடையில் இருக்கும், 'எலாஸ்டிக்' ஆகியவை கிடைத்தன. இதையடுத்து வழக்கு விசாரணை சூடுபிடிக்க துவங்கி உள்ளது. இதற்கிடையில், எலும்புகள் சிக்கிய விவகாரத்தில், தர்மஸ்தலா கிராம பஞ்சாயத்து புது விளக்கம் அளித்துஉள்ளது. தர்மஸ்தலாவில் இறந்த அடையாளம் தெரியாதவர்களின் உடல்கள் கிராம பஞ்சாயத்து சார்பில் புதைக்கப்பட்டதாகவும், இதற்கு ஆவணங்கள் இருப்பதாகவும் கூறியுள்ளது. இதனால், எந்தெந்த ஆண்டுகளில் எத்தனை உடல்கள், எங்கு புதைக்கப்பட்டன என்று முழு ஆவணங்களையும் தாக்கல் செய்யும்படி, தர்மஸ்தலா கிராம பஞ்சாயத்துக்கு எஸ்.ஐ.டி., அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

sivan
ஆக 26, 2025 08:22

நீங்க சொல்வது மதரஸா அரபிக் கல்லூரி, சுவிசேஷ சிறப்பு பிரார்த்தனை என்றெல்லாம் நடக்கும் கோல்மால்களைத்தானே நிச்சயம் விசாரணைக்கு பின் தூக்கில் போட வேண்டும்


Subramanian Chenniappan
ஆக 05, 2025 08:03

அதே மாதிரி கோவையிலும் தேட வேண்டும் . ஆசிரமத்தில் . அதே மாதிரி யார் அந்த அண்ணா யூனிவர்சிட்டி சார் விஷயத்திலூம் . யோக்கியர்கள்


J.Isaac
ஆக 01, 2025 11:37

விரைவில் தமிழ்நாட்டிலும் இதை போல் வெளிவரும்


Ramesh Sargam
ஆக 01, 2025 12:38

நேத்ராவதி நதி நீராவது சுத்தமாக இருக்கும். தோண்டலாம். ஆனால் தமிழகத்தில் உள்ள கூவம் நதி, அடையாறு மற்றும் பல ஆறுகளில் ஓடுவது சாக்கடை நீர். அதில் இறங்கி யார் தேடமுடியும்.


Ganesh Subbarao
ஆக 01, 2025 16:12

சித்தரஞ்சன் சாலையில் உள்ள ஒரு வீட்டில் தோண்டினால் கிடைக்கலாம்


திகழ்ஓவியன்
ஆக 01, 2025 10:51

இதை பற்றி எல்லாம் கேட்க மாட்டாரா


Thravisham
ஆக 01, 2025 11:51

காசாவில் ஹமாஸ் நிறைய பேரை கொன்னு பொதச்சிருக்கானுவ. அங்க போய் பாத்துட்டுவா


P. SRINIVASAN
ஆக 01, 2025 10:43

இதுபோல ஆசிரமங்களை நிரந்தரமாக மூடவேணும். மதகுரு போர்வையில் இருக்கும் குற்றவாளிகளை தூக்கிலிடவேண்டும்


தமிழ்வேள்
ஆக 01, 2025 09:05

பிராஜெக்ட் ஜோஷ்வா வின் இன்னும் ஒரு வெளிப்படையான முயற்சி போல..இத்தனை நாள் யோசிச்சாங்க போல..


Kanagaraj M
ஆக 01, 2025 08:50

நாள்தோறும் கடவுளை தொழுபவர்களே இப்படி உடந்தையாக இருந்துள்ளதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.


Haja Kuthubdeen
ஆக 01, 2025 08:09

இந்த விசயத்தையும் ஏதோ ஒரு காரணத்துக்காக ஆதரிப்பவர்களும் இருக்கிறார்களே...நான் கருத்து சொன்னால் உணக்கென்ன இங்கே வேலை என்பார்கள்..கடந்து போவோம்.


V.Mohan
ஆக 01, 2025 07:59

முதலில் இந்த தூய்மை பணியாளர் என்பவரை மனோதத்துவ ரீதியில் பரிசோதிப்பது நல்லது. ஊரில் உள்ள வழக்கமாக இந்த காரியத்தில் ஈடுபடும் வெட்டியானே அந்த வேலையின் தாக்கத்தால் சோர்வடைந்து குடிகாரனாகின்றான். இந்த தூய்மை பணியாளன் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட பெண்களின் உடல்களை தனி ஒருவனாக புதைத்தேன் என்பதே நம்ப இயலாததாக உள்ளது. மேலும் இத்தனை வருடங்களாக தொடர்ந்து இம்மாதிரி கொலையான உடல்களை புதைத்தும் மனநிலை மாறாமல் இத்தனை காலம் வாழ்ந்திருக்கிறான் என்பதை சத்தியமாக நம்புவது மிகக் கடினம். அவனது ""மோடிவ்"" என்ன என்பதை போலீஸார் முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் கானல் நீரை தேடி ஓடிய கதையாகிவிடும். போலீஸின் நேரமும் முயற்சியும் அரசாங்க பணமும் வீணாகும் அபாயம் உள்ளது.


jaya
ஆக 01, 2025 10:26

அப்போது பல ஆண்டுகளாக அங்கு காணாமல் போன பெண்களின் நிலை? நூற்றுக்கு மேற்பட்டவர்கள் எப்படி தடயமின்றி காணாமல் போனார்கள் ? போலீஸ் முதலில் இப்படிப்பட்ட சந்தேகங்களை தீர்த்தபின் தான் ஸ்பெஷல் டீம் எல்லாம் போட்டிருப்பார்கள்


Narayanan Muthu
ஆக 01, 2025 07:19

இந்த குற்றங்களில் மட்டும் குற்றவாளிகள் தண்டிக்க படுவார்களா என்ன. நீதியின் மீது இருந்த நம்பிக்கை போயி போச்சு.


சுந்தரம் விஸ்வநாதன்
ஆக 01, 2025 08:54

இல்லீங்க கொஞ்சம் மனசுல மூலையிலே நம்பிக்கை இருக்கு. செத்தவங்க வந்து காசு கொடுத்து நீதியை பேரம் பேசி வாங்கமாட்டாங்கன்னு.