உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விவசாயிகள் பிரச்னைக்கு தீர்வு!

விவசாயிகள் பிரச்னைக்கு தீர்வு!

மஹாராஷ்டிராவில் விவசாயிகள் பல பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். பருத்தி மற்றும் சோயா பீன்சுக்கு சரியான கொள்முதல் விலையை பா.ஜ., கூட்டணி அரசு வழங்கவில்லை என்பது எனக்கு தெரியும். 'இண்டி' கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்தவுடன், விவசாயிகள் பிரச்னைக்கு தீர்வு காண்போம்.- ராகுல்,லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர்,காங்கிரஸ்

மக்களை ஏமாற்றி விட்டனர்!

காங்கிரசின் வரலாறு பொய் வாக்குறுதிகளால் நிறைந்தது. அவர்களின் வாக்குறுதியை நம்பி ஆட்சியில் உட்கார வைத்த ஹிமாச்சல பிரதேச மக்கள், அதன் பலனை இன்று அனுபவிக்கின்றனர். பெண்களுக்கு உதவித் தொகை, மின்சார மானியம் போன்ற எதையும் காங்கிரஸ் அரசு செயல்படுத்தவில்லை.- அனுராக் தாக்குர், முன்னாள் மத்திய அமைச்சர்,பா.ஜ.,

பொய் வாக்குறுதி!

கேரளாவில் வக்பு வாரிய இடம் தொடர்பான விஷயத்தில், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் மக்களை திசை திருப்புகின்றனர். நில பிரச்னையை தீர்த்து வைப்பதாக பொய்யான வாக்குறுதி அளித்து ஏமாற்றுகின்றனர். - பிரகாஷ் ஜாவடேகர்முன்னாள் மத்திய அமைச்சர்,பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Rajarajan
நவ 13, 2024 07:05

எங்கே, மறுக்கா மறுக்கா சொல்லு. இன்னொரு முறை சொல்லுங்க. உங்க வண்டியை அப்படியே கர்நாடகா பக்கம் திருப்பி, தமிழகத்துக்கு காவிரி தண்ணியை உடனே வாங்கி தாங்க பாப்போம். ஆல் இந்தியா நெட்ஒர்க் ரயில்வேல புகுந்து குளிர்காய நெனச்சிங்க. இப்போ விவயசாயிகள வெச்சி கெளம்பிடீங்க. அதானே, எதிர்க்கட்சி அரசியல் செய்யாம, பின்ன அவியலா செய்யும். மொதல்ல உங்க ஜாதகத்தை சோதிங்க. நீங்க எதை சீரியஸா ஆரம்பிச்சாலும், கடைசில அது ஜோக்கா முடியுது.


J.V. Iyer
நவ 13, 2024 05:03

ராவுலே உங்கள் பணமுதலாளி ஜார்ஜ் சோரஸை ஒரு முறை அழைத்துவாருங்கள். எல்லா பிரச்சினைகளும் தீர்ந்துவிடும். ஒரு முறை போர்கிஸ்தான் சென்று வாருங்கள்.


சமீபத்திய செய்தி