மேலும் செய்திகள்
எதிரிகளுக்கு ஆதரவு தரும் காங்: பாஜ குற்றச்சாட்டு
1 hour(s) ago | 2
5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்து; குஜராத்தில் 4 பேர் பலி!
2 hour(s) ago | 1
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
7 hour(s) ago | 7
புதுடில்லி:தலைநகர் டில்லியில், கொள்ளையருடன் போராடிய வாலிபர் கத்தியால் சரமாரியாகக் குத்திக் கொல்லப்பட்டார்.கிழக்கு டில்லி மதுவிஹாரில், டில்லி மேம்பாட்டு ஆணைய பூங்கா நேற்று முன் தினம் இரவு, அதேபகுதியைச் சேர்ந்த நரேந்திரன்,32, தன் நண்பருடன் மது அருந்திக் கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த நான்கு பேர், இருவரிடம் இருந்த பை, மொபைல் போன் ஆகியவற்றை பறிக்க முயன்றனர்.நரேந்திரன் நான்கு கொள்ளையருடனும் போராடினார்.ஆத்திரமடைந்த கொள்ளையர் நரேந்திரனை கத்தியால் சரமாரியாகக் குத்தி விட்டு தப்பினர்.ரத்தவெள்ளத்தில் சரிந்த நரேந்திரன், லால் பகதுார் சாஸ்திரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதை உறுதி செய்தனர்.இதுகுறித்து, மதுவிஹார் போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையரை தேடி வருகின்றனர்.
1 hour(s) ago | 2
2 hour(s) ago | 1
7 hour(s) ago | 7