உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆழ்துளை கிணற்றில் விழுந்தவர் திருடன்

ஆழ்துளை கிணற்றில் விழுந்தவர் திருடன்

புதுடில்லி:டில்லியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறந்தவர், திருடிக் கொண்டு ஓடிவந்த போது விபத்தில் சிக்கியுள்ளார் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.டில்லி கேஷேபூர் மண்டியில், குடிநீர் வாரிய சுத்திகரிப்பு நிலையத்தின் ஆழ்துளை கிணற்றுக்குள் கடந்த 10ம் தேதி அதிகாலையில், 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் தவறி விழுந்தார்.பேரிடர் மீட்புப் படையினர் 12 மணி நேரம் போராடி, அவரை மீட்டனர். ஆனால், அவர் உயிரிழந்து இருந்தார். இந்த சம்பவம் குறித்து விகாஸ்புரி வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை துவக்கினர்.இதுகுறித்து போலீசார் கூறியதாவது:கேஷேபூரில் ஒரு வீட்டில் திருடிய அந்த நபரை ஸ்கூட்டரில் சிலர் துரத்தி வந்துள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க, குடிநீர் வாரியத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் நுழைந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்துள்ளார். அவர் யார் என இதுவரை அடையாளம் தெரியவில்லை. கைரேகை நிபுணர்கள் மற்றும் முகத்தை அடையாளம் காணும் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் காணாமல் போனவர் குறித்து ஏதேனும் புகார் அளிக்கப்பட்டுள்ளதா என அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷன்களிலும் தகவல் கேட்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ