உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆயிரம் சண்டைகள் தொடருது: ஆனாலும் இங்கே ஒற்றுமை!

ஆயிரம் சண்டைகள் தொடருது: ஆனாலும் இங்கே ஒற்றுமை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

எதிர்க்கட்சிகள் என்றாலே ஆளுங்கட்சி என்ன கூறினாலும், அதை எதிர்ப்பதுதான் என ஆகிவிட்டது. ஆனால், ஒரு விஷயத் தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என, இரண்டு அணிகளுமே ஒற்றுமையாக உள்ளன.இரும்பு மனிதர் சர்தார் வல்லபபாய் படேலின், 150வது பிறந்த நாள், பழங்குடி யினத்தின் தலைவரும், பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக போராடியவருமான ஜார்க்கண்டின் பிர்சா முண்டா, 150வது பிறந்த நாள் மற்றும் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின், 100வது பிறந்த நாள் என, மூன்று விழாக்களை நடத்த மத்திய அரசு சார்பில் மூன்று கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.இந்த மூன்று கமிட்டிகளுக்கும் தலைவர் பிரதமர் மோடி. படேல், 150வது பிறந்த நாள் கொண்டாட்ட குழுவில், 124 உறுப்பினர்கள் உள்ளனர். முன்னாள் ஜனாதிபதிகள், சீனி யர் மத்திய அமைச்சர்கள், சித்தராமையா, ஸ்டாலின், ஒமர் அப்துல்லா, ரேவந்த் ரெட்டி உட்பட 21 முதல்வர்கள் உள்ளனர்.பிர்சா முண்டா விழா கொண்டாட்ட குழு வில், 118 பேர் உள்ளனர். முன்னாள் ஜனாதி பதிகள், 20 கவர்னர்கள், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், பினராயி விஜயன் உட்பட 20 முதல்வர்கள் இந்த குழுவில் அடக்கம்.வாஜ்பாய், 100வது பிறந்த நாள் விழாக் குழுவில் 124 பேர் உள்ளனர். இதில் முன்னாள் ஜனாதிபதிகள், 19 கவர்னர்கள், மம்தா பானர்ஜி, பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான் உட்பட, 17 முதல்வர்கள் உள்ளனர்.நாட்டின் சிறந்த தலைவர்களின் பிறந்த நாள் விழாக்களைக் கொண்டாட, இப்படி அனைத்து தரப்பு கட்சியினரும், ஒன்றாக இணைந்திருப்பது, நம் நாட்டின் ஜனநாயக அமைப்பு எப்படி சிறப்பாக உள்ளது என்பதற்கு எடுத்துக்காட்டு!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

R.RAMACHANDRAN
செப் 01, 2025 08:00

இந்த நாட்டில் விழா கொண்டாடிவிட்டால் மக்களாட்சி மாண்புடன் இருப்பதாக கூறுகின்றனர் பொய்யர்கள். உண்மையில் மக்களாட்சி மாண்புடன் இல்லை ஊழல் மிக்க அதிகார வர்க்கத்தால் என்பதை இவர்கள் உணர்வது எப்போது.


Sivagiri
ஆக 31, 2025 13:55

அதனாலென்ன, அமௌண்ட்டை கொடுத்தாச்சுன்னா, எங்க வேண்ணாலும் வருவோம்.. எல்லாம் அமௌண்டுதான் . . . இங்கே கட்சி மீட்டிங்குக்கு இருநூறு ரூபாயும் சாப்பாடும் போட்டா எந்த கட்சி கூப்பிட்டாலும் வரும் கூட்டம் போலத்தான் . . . ஜனநாயகம் என்றாலே இப்போதெல்லாம் பணநாயகம்தான் . .


Barakat Ali
ஆக 31, 2025 12:56

அப்படி இல்லீங்கோ ... சாதி மத அடிப்படையில் ஒட்டு வேட்டை ஆட எல்லோரும் ஒண்ணா சேர்ந்துக்குவாங்க .....


kannan
ஆக 31, 2025 08:42

அடுத்தது சாவர்கருக்கு கொண்டாடும் போது இவர்கள் வாய் திறக்கக் கூடாது. இவர்கள் திட்டம் இதுவா என்பதுதானே டவுட்டாக இருக்கிறது


Arya Prasad
ஆக 31, 2025 08:00

அவர்களுக்கு தேவையானது வரி முலம் தொல்லைப் பன்னுவதிலும் ஓற்றுமை


சுந்தரம் விஸ்வநாதன்
ஆக 31, 2025 08:00

இந்த செய்தியை ஒருவாரத்துக்கு முன்பே வெளியிட்டிருக்கவேண்டும். குன்றிய டாஸ்மாக்கினிஸ்தான் நாடு உதயமான 54 ஆண்டுவிழாவான ஆகஸ்ட் 31 நாளான இன்றைக்கு அதைக்கொண்டாட காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களைக்கொண்ட கமிட்டி அமைத்து நாலு காசு பார்த்திருக்கலாம்


m c mouli
ஆக 31, 2025 09:03

two members can not manage one program vast public money this type of program no use to public


Abdul Rahim
ஆக 31, 2025 09:51

காங்கிரஸ் அதை செய்யவில்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை