உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆங்கிலேயர் நினைவாக பல்கலையா? பெயரை மாற்ற மத்திய அமைச்சர் யோசனை: கிளம்பியது எதிர்ப்பு

ஆங்கிலேயர் நினைவாக பல்கலையா? பெயரை மாற்ற மத்திய அமைச்சர் யோசனை: கிளம்பியது எதிர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புவனேஸ்வர்: ஆங்கிலேயர் நினைவாக உள்ள பல்கலையின் பெயரை மாற்றுவது குறித்து யோசிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். இதற்கு அங்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.ஒடிசாவின் கட்டாக் நகரில் 1868 ம் ஆண்டு , ஒடிசாவை நிர்வகித்த தாமஸ் எட்வர்ட் ராவேன்ஷா கல்லூரி ஒன்றை உருவாக்கினார். இக்கல்லூரிக்கு அவரின் நினைவாக ராவேன்ஷா என பெயர் சூட்டப்பட்டது. 2006 ம் ஆண்டு பல்கலையாக இது தரம் உயர்ந்தது. இங்கு தற்போது 8 ஆயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இக்கல்லூரி உருவாவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்(1866) அம்மாநிலத்தை பஞ்சம் ஆட்டிப்படைத்தது. அதில், பல லட்சம் பேர் உயிரிழந்தனர். அப்போது அம்மாநிலத்தை ராவேன்ஷா தான் நிர்வகித்து வந்தார்.இந்நிலையில் தர்மேந்திர பிரதான் கூறியதாவது: ராவேன்ஷா பல்கலையின் பெயரை மாற்ற வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. அவரது ஆட்சி காலத்தில் தான் பஞ்சம் ஏற்பட்டு லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். அப்போது அவரது நிர்வாகத்தில் இருந்தவர்கள் என்ன செய்தனர்?. ஒடிசா மக்களுக்கு ஏற்பட்ட துயரத்திற்கு காரணமானவர்களை போற்றுவது நமக்கு பெருமை அளிக்குமா? பல்கலை பெயரை மாற்றுவது குறித்து கல்வியாளர்கள் சிந்திக்க வேண்டும். இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.இது தொடர்பாக அப்பல்கலையில் படித்தவரும் ஒடிசா முன்னாள் தலைமை செயலாளருமான சாஹாதேப் சாஹூ கூறியதாவது: இக்கல்வி நிறுவனத்தை தோற்றுவித்து ஒடிசாவிற்கு ராவேன்ஷா நன்மை செய்துள்ளார். அக்கால கட்டத்தில் ஒடியா மொழி தனது அடையாளத்தை இழந்து போராடி கொண்டு இருந்தது. உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அவர் ஆற்றிய பணியை நினைவுகூர்ந்து, கல்லூரிக்கு ராவேன்ஷா பெயர் சூட்டப்பட்டது. ஒடிசா மக்களுக்கு ஏற்பட்ட துயரத்திற்கு அவர் காரணமல்ல. இவ்வாறு அவர் கூறினார்.சத்யாகாம் மிஸ்ரா என்ற கல்வியாளர் கூறுகையில், ராவேன்ஷாவின் பங்களிப்பு பற்றி அறிந்தவர்கள் கல்லூரியின் பெயரை மாற்ற மாட்டார்கள். ஒடியா மொழியை இன்று நமது மாணவர்கள் பேசுகிறார்கள் என்றால், அதற்கு ஆங்கிலேய அதிகாரி தான் காரணம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

naadodi
செப் 01, 2024 23:51

நீர் பயன்படுத்தும் இன்டர்நெட், கணினி, மற்ற மென்பொருள் எல்லாம் வெள்ளையர் வழி வந்தாலும், அதைப் பயன்படுத்தியே அவர்களை வெறுக்கும்.. நல்லவர் நீர்..


சமூக நல விரும்பி
செப் 01, 2024 20:40

ஆங்கிலேயர்களில் நல்ல மனிதர்களும் இருக்கிறார்கள். சுதந்திரம் கிடைத்தாலும் இன்னும் நாம் ஆங்கிலேயர் நாடுகளில் போய் வேலை செய்யவில்லையா. ஆங்கிலேயர் நாட்டுக்கு நம் நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்து நம் பொருளாதாரம் முந்நேரவில்லையா. எல்லாவற்றுக்கும் ஒப்பாரி வைக்க கூடாது.


அஸ்வின்
செப் 01, 2024 19:56

இருக்கர பிரச்ச பத்தாது இந்தா ளுவேற


Sathyanarayanan Sathyasekaren
செப் 01, 2024 18:49

சத்யகம் மிஸ்ராவின் கருத்து கேவலமாக உள்ளது. நமது தாய்மொழியை பேச ஆங்கில கிருத்துவன் உதவி செய்தானாம், ஒரிய மக்களை இதைவிட கேவலப்படுத்தமுடியாது. ஆங்கிலேய கிருத்துவர்கள் கல்வி நிறுவனங்களை உருவாக்கியது, அவர்களுக்கு தேவையான குமாஸ்தாக்களி உருவாக்கவும், மதம் மாற்ற மூளை சலவை செய்யவும், நமது பாரதிய மொழிகள் கேவலமானவை, ஆங்கிலம் மட்டுமே உயர்ந்தது எண்டு மக்களை ஏமாற்ற செய்த காரியங்கள். அறிவுஜீவிகளுக்கு இந்த சாதரண விஷயங்கள் புரியவில்லையா அல்லது மத மாற்ற சக்திகளுக்கு துணைபோகவே?


J.Isaac
செப் 01, 2024 18:36

இப்போது நாட்டில் வேலை இல்லா பஞ்சம் இல்லையா?


Apposthalan samlin
செப் 01, 2024 18:30

ஆங்கிலேயன் கட்டிய hawra பிரிட்ஜ் அப்படியே நிற்கிறது vt ஸ்டேஷன் புனே சுரங்க ரயில் பாதை இன்னும் எத்தனையோ


Sathyanarayanan Sathyasekaren
செப் 01, 2024 20:38

கரிகாலன் கட்டிய கல்லனையும், ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை கோவிலும், தமிழகமெங்கும் ஹிந்துக்கள் கட்டிய ஆயிரநகக்கன கோவில்களும் இன்னும் அப்படியே இருக்கின்றன. சோத்துக்கு மதம் மாறியவர்களை நமது பெருமையை விட அந்நிய கிருத்துவன் கட்டியவைகளே பெருமை போல. பாரத மக்களின் சொத்துக்களை கொள்ளைடித்து இங்கிலாந்துக்கு, போர்ச்சுகீஸ்க்கு கடத்திய கிருத்துவர்களை பற்றி பெருமை பேசுவதை நிறுத்துங்கள். பாலைவன பயங்கரவாத மதத்தினர் பாரத பல்கலைக்கழகங்களை தீ வைத்து கொளுத்தி மாபெரும் பாவம் செய்தனர். நாளாந்த பல்கலைக்கழகம் ஆறு மாதங்கள் எரிந்ததாம் .


odisha
செப் 01, 2024 17:54

கேவலம். ஆங்கிலேயன் அடிமைத்தனம் இன்னமும் ஓயவில்லை...


J.Isaac
செப் 01, 2024 18:35

ஏன் உங்களை அடிமைப்படுத்தியிருந்த ஆங்கிலேய நாட்டிற்கு வேலைக்கு செல்லுவது அசிங்கம்,கேவலம் இல்லையா?


GoK
செப் 01, 2024 17:34

இந்த ஆதரவு மூலம் இந்தியாவுக்கு பல நன்மைகளும் ஆங்கிலேயர் காலத்தில் நிகழ்ந்ததால் நாட்டின் பெயரை விக்டோரியா நாடு என மாற்றி விடலாம்...வேறு சிலபேர் அதை துக்ளக் நாடு என கூட மாற்ற கூறலாம்