உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆதார், ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டையை நம்பகமான ஆவணங்களாக கருத முடியாது: தேர்தல் ஆணையம்

ஆதார், ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டையை நம்பகமான ஆவணங்களாக கருத முடியாது: தேர்தல் ஆணையம்

புதுடில்லி: 'ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு போன்றவற்றை வெறுமனே அடையாள சான்றாக மட்டுமே கருத முடியும்: அவை நம்பகமான ஆவணங்கள் அல்ல' என, உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. பீஹாரில் தேர்தல் ஆணையம் நடத்தி வரும், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பாக பதில் அளிக்கும்படி, தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டு உள்ளதாவது: வாக்காளர் பட்டியலில் உள்ள, தகுதியற்ற நபர்களின் பெயர்களை நீக்கவே, சிறப்பு தீவிர திருத்தப் பணி நடக்கிறது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி ஓட்டளிக்க குடியுரிமை, வயது, இருப்பிட சான்று அவசியம். அந்த சான்றுகள் இல்லாதவர்கள் ஓட்டளிக்க தகுதியற்றவர்கள். ஆதார், ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டைகளை, தீவிர வாக்காளர் திருத்த பட்டியலுக்கான ஆவணங்களில் சேர்க்க முடியாது. அவற்றை வெறுமனே அடையாள சான்றாக மட்டுமே கருத முடியும். ஆதார் என்பது குடியுரிமை பெற்றதற்கான ஆதாரம் அல்ல. மேலும், பலர் முறைகேடாக ரேஷன் கார்டுகள் பெற்றுள்ளனர். எனவே, அவற்றையும், வாக்காளர் அடையாள அட்டையையும் நம்பகமான ஆவணமாக கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது. தேர்தலில் முறைகேடுகளை தடுக்கவே, தீவிர வாக்காளர் திருத்த பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. வாக்காளர்கள் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டாலும், பீஹார் தேர்தல் வரை புதிய வாக்காளர்கள் தங்களது பெயர்களை சேர்ப்பதற்கு வாய்ப்பு தரப்படும் என்றும், தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. இவ்வழக்கு வரும், 28ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

ஜெய்ஹிந்த்புரம்
ஜூலை 23, 2025 19:38

பாஜாக்கா கட்சி அடையாள அட்டை மட்டுமே தகுதி.


J.Isaac
ஜூலை 23, 2025 18:20

கேணப்பயல்கள் ஊர்ல கிறுக்கு பயல்கள் நாட்டாமை. கிறுக்கு பயல்கள் ஊர்ல கேணப்பயல்கள் நாட்டாமை. ஆதார் சரியில்லை. ரேசன் கார்டு , ஆண்டாண்டு காலமாக பயன்படுத்திய வாக்காளர் அட்டை சரியில்லை. பின் எதற்கு கோடிக்கணக்கான மக்கள் வரிப்பணத்தை வீணடிக்க வேண்டும்.பத்து ஆண்டுகளாக சிலரது சுய நலத்துக்காக நடுத்தர, ஏழை மக்களை இப்படி வாட்டி வதைப்பது கடவுளுக்கே அடுக்காது. சீக்கிரத்தில் நல்ல முடிவு வரும்.


venugopal s
ஜூலை 23, 2025 15:00

வேறு எந்த ஆவணங்களை குடியுரிமைக்கான நம்பகமான ஆதாரங்களாக ஏற்றுக் கொள்வார்கள் என்பதை மத்திய பாஜக அரசு தெளிவாக உச்ச நீதிமன்றத்தில் அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் உச்ச நீதிமன்றம் மத்திய அரசின் வாதத்தை ஏற்றுக் கொள்ளக் கூடாது.


தத்வமசி
ஜூலை 23, 2025 09:57

அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் சேர்ந்து செய்யும் பல செயல்கள் நாட்டு நலனுக்கு எதிராகவே உள்ளது. ஒரு ஊரில் வாழும் இந்தியருக்கு ரேசன் கார்டு வழங்க பல மாதங்கள் இழுத்தடிக்கும் நிர்வாகம், வங்கதேசத்தவர்களுக்கும், ரோஹாங்க்ஹியாக்களுக்கும் எப்படி வாரி வாரி வழங்குகிறார்கள் என்பது புரியாத புதிர். ஆதாரில் ஒரு திருத்தம் செய்வதற்குள் நாக்கில் நுரை தள்ளுகிறது. ஆனால் இவர்களுக்கு மிகவும் சுலபமாக கிடைக்கிறது. எப்படி ? சரி விடுங்கள். அப்ப இந்திய பிரஜை என்பதற்கான ஆதாரம் என்ன ?


GMM
ஜூலை 23, 2025 09:25

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி ஓட்டளிக்க குடியுரிமை, வயது, இருப்பிட சான்று தேவை. குடியுரிமை தாசில்தார் வழங்குவது. வயது நகராட்சி பிறப்பு சான்று, பள்ளி சான்று அல்லது அரசு மருத்துவர் சான்று. இருப்பிட சான்று பத்திர பதிவு, 10 சாட்சிகள் உடன் தாசில்தார் சான்று அல்லது போஸ்ட் மாஸ்டர் சான்று. இதன் அடிப்படையில் மட்டும் தான் வாக்குரிமை பெற முடியும். வாக்குரிமை கட்சி உறுப்பினர் போல் கொடுக்க முடியாது.


J.Isaac
ஜூலை 23, 2025 18:06

இப்போது 65, 70 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு இந்த சட்டங்கள் தெரியாதே. இந்த ஆவணங்கள் அதிகமாக இருக்க வாய்ப்பில்லையே.


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூலை 23, 2025 08:21

ரேஷன் கார்டுகள் உள்ளூர் அரசியல் வாதிகள் தயவிருந்தால் எவ்வளவு வேண்டுமானாலும் தாராளமாக கிடைக்கும். வாக்காளர் பட்டியல் வாக்காளர் திருத்த முகாமில் பங்கேற்கும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அவர்கள் இஷ்டபடி தயாரிக்கப்படுகிறது. பெரும்பாலான அரசு ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் திமுக அனுதாபிகளாக உள்ளார்கள்.


பாமரன்
ஜூலை 23, 2025 08:01

பேசாமல் பாஜக உறுப்பினர் அட்டை மட்டுமே இந்தியர்ன்னு சொல்லத்தக்க அடையாளம்னு நம்ம தள பகோடாஸ் மாதிரி சொல்லிடுங்க ஆபீஸர்... அதுக்கு ஆமாமாமாம் போடத்தான் நம்ம அப்ரசண்டிக இருக்குதுகளே....


Mettai* Tamil
ஜூலை 23, 2025 10:45

எந்த கட்சி உறுப்பினர் அட்டை வைத்திருந்தாலும் கள்ளக் குடியேறிகளை களை எடுப்பது காலத்தின் கட்டாயம் ..


J.Isaac
ஜூலை 23, 2025 22:44

எத்தனை கள்ளத்தனம் பண்ணினாலும் ஆட்சியை பிடிக்க முடியாது.


GMM
ஜூலை 23, 2025 07:42

பிறப்பு இறப்பு சான்று, பள்ளி சான்று ஒருவருக்கு ஒன்று மட்டும் இருக்கும். இவைகள் அரசின் மூல பதிவேடுகளில் இருந்து எடுத்து தரப்படும். ஆனால், ஆதார், ரேஷன், வாக்காளர் அடையாளம் ஒன்றுக்கு மேல் ஒருவர் பெற முடியும். அந்நிய கள்ள குடியேறிகள் பெற முடியும். காரணம் மூல ஆவணங்கள் அடிப்படையில் வழங்குவது கிடையாது. தேர்தல் ஆணையம் ஒரு அரசியல் சாசன அமைப்பு. நீதிபதி ஜனாதிபதி ஒப்புதல் இல்லாமல் தேர்தல் ஆணையம் போன்ற இன்னொரு அரசியல் சாசன அமைப்பை விசாரிக்க முடியாது.


அருண், சென்னை
ஜூலை 23, 2025 07:31

இவுங்க டாட்டா தான் தப்பாக உள்ளது, எப்படி 1 லட்சம் வாக்காளர்களை நீக்கினார்கள்? நிறைய anti-dmk பெயர்கள் நீக்கப்பட்டு இருந்தது... முதலில் ECகாக வேலை செய்யும் ஆட்களை மாற்ற வேண்டும்... மொபைலுக்கு விவரங்களை அனுப்பனும், எதுக்கு பிரிண்டிங் மற்றும் லாமிநேஷன் செலவு? அதை சரியான ஆட்களிடம் சேர்க்காமல் குப்பைதொட்டியில் போடுகிறார்கள்...


Padmasridharan
ஜூலை 23, 2025 07:15

ஆதார், ரேஷன் கார்டு நம்பகமான ஆவணங்கள் கிடையாது என்பதற்க்கு விளக்கம் சொன்னவங்க வாக்காளர் அடையாள அட்டைக்கு விளக்கம் சொல்லலையே சாமி. வோட்டு போடத்தானே அது கொடுத்தாங்க. ஒரு தனி மனுஷன் போலிய உருவாக்க முடியாது. எவனோ பணத்துக்கு இப்படி பண்ணி கொடுத்தவன புடிக்க வேண்டியதுதானே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை