உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிவில்லைன்ஸ் பங்களாவுக்கு சீல் அரசியலாக்கும் ஆம் ஆத்மியினர்

சிவில்லைன்ஸ் பங்களாவுக்கு சீல் அரசியலாக்கும் ஆம் ஆத்மியினர்

சிவில்லைன்ஸ்,:சிவில்லைன்ஸ் பகுதியின் ப்ளாக்ஸ்டாப் சாலை பங்களாவுக்கு பொதுப்பணித்துறையினர் 'சீல்'வைத்த விவகாரத்தை ஆம் ஆத்மி அரசியலாக்கி வருகிறது.டில்லியின் முதல்வராக பதவியேற்ற ஆதிஷியும் அவர் சார்ந்த ஆம் ஆத்மியும் சர்ச்சை புள்ளிகளாக உருவெடுத்துள்ளன. தற்போது முதல்வராக உள்ள ஆதிஷி, முந்தைய அரவிந்த் கெஜ்ரிவால் அரசில் அமைச்சராக இருந்தார்.அப்போது, அவருக்கு மதுரா சாலையில் ஏ.பி., 17 என்ற பங்களா ஒதுக்கப்பட்டிருந்தது. நேற்று வரை அதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. முதல்வராக பதவியேற்றதும், சிவில்லைன்ஸ் பகுதியில் உள்ள ப்ளாக்ஸ்டாப் சாலையில் அரவிந்த் கெஜ்ரிவால் காலி செய்த வீட்டுக்கு திடீரென குடியேறினார்.'பொதுவாக முதல்வருக்கும் அமைச்சர்களுக்கும் அரசு பங்களாக்களை பொதுப்பணித்துறையே ஒதுக்கீடு செய்யும். சிவில்லைன்ஸ் பங்களாவை அரவிந்த் கெஜ்ரிவால் காலி செய்ததும் அதை யாருக்கும் பொதுப்பணித்துறை ஒதுக்கவில்லை' என, துணைநிலை கவர்னர் அலுவலகம் கூறியுள்ளது.ஆனால் இதை மறுத்துள்ள ஆம் ஆத்மி, 'சிவில்லைன்ஸ் இல்லத்தை அரவிந்த் கெஜ்ரிவால் காலி செய்ததும், ஏற்கனவே முதல்வராக பதவியேற்றிருந்த ஆதிஷியிடம் இல்லத்தின் சாவியை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஒப்படைத்தனர்' என கூறியுள்ளது.பொருட்களை 'பேக்கிங்' செய்த அட்டைப்பெட்டிகளுக்கு மத்தியில் முதல்வர் ஆதிஷி பணியாற்றும் படங்களை தன் 'எக்ஸ்' பக்கத்தில் பகிர்ந்துள்ள ஆம் ஆத்மி, பா.ஜ.,வை கடுமையாக விமர்சித்துள்ளது.இதுகுறித்து அரசியல் விமர்சகர்கள் கூறுகையில், 'அரசியல் நாகரீகத்தைப் பற்றி பேசும் ஆம் ஆத்மி கட்சியினர், கலால் கொள்கை விவகாரத்தில் சரிவு கண்டனர். தற்போது முதல்வர் இல்ல விவகாரத்திலும் அவர்கள் நடந்து கொண்டது கடும் விமர்சனத்தை கிளப்பியுள்ளது. ஒதுக்கீடு செய்யாத இல்லத்தில் முதல்வர் குடியேறியது அழகல்ல' என்றனர்.டில்லி மக்களுக்காக உழைக்கும் ஆதிஷியின் உறுதிப்பாட்டை பா.ஜ.,வால் பறிக்க முடியாது. நடந்து வரும் நவராத்திரி விழாவின்போது, ஒரு பெண் முதல்வரின் பொருட்களை அவரது வீட்டில் இருந்து பா.ஜ., துாக்கி எறிந்துவிட்டது. முதல்வரின் இல்லத்தை பலவந்தமாக கைப்பற்ற முயற்சிக்கிறது.தேர்வு செய்யப்பட்ட பெண் முதல்வருக்கும், டில்லி மக்களுக்கும் இது ஒரு பெரிய அவமரியாதை. டில்லியில் 27 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத ஒரு கட்சி, முதல்வரின் வீட்டை வலுக்கட்டாயமாக கைப்பற்ற முயற்சிக்கிறது. துணைநிலை கவர்னர் உத்தரவின் பேரில் ஆதிஷியின் உடைமைகள் பங்களாவில் இருந்து வெளியேற்றப்பட்டன.சஞ்சய் சிங்ராஜ்யசபா எம்.பி.,ஆம் ஆத்மிமுதல்வர் ஆதிஷிக்கு ஒரு அற்புதமான குடியிருப்பு ஒதுக்கப்பட்டுள்ளது. அவர் தற்போது குடியிருக்கும் இல்லத்தில் தான், அப்போதைய முதல்வர் ஷீலா தீட்சித், 10 ஆண்டுகள் குடியிருந்து ஆட்சி செய்தார். ஆம் ஆத்மி கட்சித் தலைவர் மணீஷ் சிசோடியா 8 ஆண்டுகள் துணை முதல்வராகவும் இதே இல்லத்தில் இருந்து ஆட்சியை நடத்தினார்.பிறகு எதற்காக சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள ஷீஷ்மஹாலை ஆக்கிரமிக்க இவ்வளவு ஆசை? காலி அட்டைப் பெட்டிகளுக்கு மத்தியில் வேலை செய்வது போல் நடித்து, யாரை ஏமாற்றுகிறார்? தாங்கள் எப்படி தவறாக வழிநடத்தப்படுகிறோம் என்பதை டில்லி மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வேலை செய்ய விரும்பாததால், பொதுமக்களை தவறாக வழிநடத்தி அரசியல் ஆதாயம் தேடுவதை மட்டுமே ஆம் ஆத்மி விரும்புகிறது.விஜேந்தர் குப்தா,எதிர்க்கட்சித் தலைவர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ