உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கெஜ்ரிவால் கார் மீது கல்வீச்சு: பா.ஜ., மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

கெஜ்ரிவால் கார் மீது கல்வீச்சு: பா.ஜ., மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் கார் மீது கல்வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பா.ஜ., தான் காரணம் என ஆம் ஆத்மி குற்றம்சாட்டி உள்ளது.டில்லி சட்டசபைக்கு பிப்.,5 ல் தேர்தல் நடைபெற உள்ளது. ஆட்சியை தக்க வைக்க ஆம் ஆத்மியும், ஆட்சியை பிடிக்க காங்கிரஸ், பா.ஜ.,வும் தீவிரமாக உள்ளன. தேர்தல் நெருங்குவதால் பிரசாரம் விறுவிறுப்பு அடைந்துள்ளது. ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றன.இந்நிலையில், டில்லியில் பிரசாரத்திற்கு சென்ற கெஜ்ரிவால் கார் மீது கல்வீசப்பட்டது. இதுவரை யாரும் கைதாகவில்லை.இது தொடர்பாக ஆம் ஆத்மி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தோல்வி பயத்தில் உள்ள பா.ஜ., குண்டர்கள் மூலம் கெஜ்ரிவால் சென்ற கார் மீது தாக்குதல் நடத்தி உள்ளது. கெஜ்ரிவாலை எதிர்த்து போட்டியிடும், பா.ஜ.,வின் பர்வேஷ் வர்மா, தொண்டர்கள் மூலம் கெஜ்ரிவால் பிரசாரத்திற்கு செல்வதை தடுக்க முயற்சித்துள்ளார். இதற்கு டில்லி மக்கள் பதிலடி கொடுப்பார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

R Gopal
ஜன 18, 2025 21:04

கெஜரிவால் கடந்த இரண்டு தேர்தல் களிலும் இந்த நாடகம் ஆடினார். இது ஒன்றும் அவருக்கு புதிதல்ல


Azar Mufeen
ஜன 18, 2025 20:40

என்ன இருந்தாலும் "நான் உயிரோட இருப்பதற்கு உங்கள் முதலமைச்சருக்கு நன்றி "என்று நம்ம ஜி நடித்தாரே ஒரு நடிப்பு பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் அது முன்னாடி இதுலாம் ஜூஜூபி


திகழ் ஓவியன், Ajax, Ontario
ஜன 19, 2025 09:32

என்னதான் இருந்தாலும் அய்யோ kolrangappa அப்டின்னு உங்க டிவி ல மாத்தி மாத்தி போட்டதை விட வா


HoneyBee
ஜன 18, 2025 19:08

அடுத்த தீதீ மம்தா. ஆஸ்கார் அவார்டு தரணும் இவுக நடிப்புக்கு


என்றும் இந்தியன்
ஜன 18, 2025 18:51

ரூ 500 கொடுத்து கல்லை வீசு கார் மீது ஆனால் ரொம்ப சேதம் எல்லாம் ஆகக்கூடாது யாராவது பிடித்து விசாரணை செய்தால், பிஜேபி தான் பணம் கொடுத்து செய்யச்சொன்னார்கள் என்று சொல்லவேண்டும் ஓகேயா என்று ஆம் ஆத்மி செய்திருக்கின்றது இதை போன தடவை செருப்பு கொண்டு இந்த தடவை கல் கொண்டு அவ்வளவு தான் வித்தியாசம்


chennai sivakumar
ஜன 18, 2025 18:19

இவனுங்கள் செட்டப் செய்யும் நாடகம். பழி பிஜேபி மேல். டெல்லி மக்கள் உண்மையிலேயே ........ இருந்தால் இவரை அட்ரஸ் இல்லாமல் தோற்கடிக்க வேண்டும்


Nandakumar Naidu.
ஜன 18, 2025 18:16

இது அந்த குள்ளநரி கெஜ்ரிவாலின் வேலை தான். அனுதாப வாக்குகளை பெற இப்படி அவரே இப்படி நாடகமாடுவார்.


குமரி குருவி
ஜன 18, 2025 18:07

இவர் சொல்லுறது நம்புகிற மாதிரி இல்லையே...இவர் குரு தூரோகியாச்சே...


ayen
ஜன 18, 2025 17:57

இதே போல பல சம்பவங்கள் தேர்தலுக்கு முன் காங்கிரஸ் செய்துள்ளது மக்கள் அனுதாப ஓட்டை பெறுவதற்கு சாட்சி இருந்தால் தேர்தல் ஆணையத்திடம் புகார் குடுக்கலாம் அல்லது வழக்கு பதிவு செய்யலாமே?


அன்பே சிவம்
ஜன 18, 2025 17:54

1). இந்திய அரசியவதிக்களில் படித்த dangerous fellow கெஜ்ரிவால். பசும் தோல் போர்த்திய நாடாக புலி.நாடாக புலி. 2). அது எப்படி யாரையும் கைது பண்ணாமல் அது BJP கட்சிக்காரர் வேலை என்று இவர் சொல்வார். ஏன் அது காங்கிரஸ் தொண்டன் ஆக இருக்கலாம், பொதுமக்களால் ஒருவர் ஆக இருக்கலாம், ஆம் ஆத்மி கட்சி தொண்டன் ஆக கூட இருக்கலாம், 3). setup செல்லப்பா கெஜ்ரிவால் ஏற்பாடு செய்து இதனை நடத்தி இருக்கலாம். மம்தா பானர்ஜி கால் உடைந்தது போல். 4). உலக மகா உருட்டு உருட்டி கெஜ்ரிவால் ஆட்சிக்கு வந்ததால் Delhi மக்கள் யராவுது ஒருவர் இந்த வேலை செய்து தங்கள் ஆசையை தீர்த்து கொண்டதாக தெரிகின்றது.


புதிய வீடியோ