உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேர்தல் பணிகளில் ஆம் ஆத்மி மும்முரம்

தேர்தல் பணிகளில் ஆம் ஆத்மி மும்முரம்

விக்ரம் நகர்:சட்டசபை தேர்தல் ஏற்பாடுகளை ஆம் ஆத்மி முடுக்கிவிட்டுள்ளது. மாவட்ட அளவிலான அலுவலகப் பணியாளர்களின் கூட்டத்தை 11ம் தேதி முதல் நடத்த அக்கட்சி முடிவு செய்துள்ளது.டில்லி சட்டசபைக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தேர்தல் நடத்தப்படலாம் என்று தெரிகிறது. இதற்காக இப்போதே ஆளும்கட்சி தயாராகி வருகிறது.சட்டசபை தேர்தலுக்கான தயாராகும் வகையில், ஆம் ஆத்மி கட்சி, மாவட்ட மற்றும் பூத் அளவிலான நிர்வாகிகள் கூட்டத்தை வரும் 11ம் தேதி முதல் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.இதை அக்கட்சியின் அமைச்சரும் மூத்த தலைவருமான கோபால் ராய் நேற்று தெரிவித்தார். இந்த கூட்டங்களில் சுமார் மாவட்ட மற்றும் பூத் அளவிலான ஒரு லட்சம் நிர்வாகிகள் பங்கேற்பர் என்றும் வரும் 20ம் தேதி முதல், வெவ்வேறு தொகுதிகளில் தேர்தல் பிரசாரத்தை அவர்கள் துவக்குவர் என்றும் அவர் கூறினார்.எனினும் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் மாவட்ட அளவில் நடத்தி வரும் பாதயாத்திரை கூட்டங்களும் தொடரும் என அவர் விளக்கம் அளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை