உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அபுதாபி புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு; மீண்டும் கொச்சிக்கு திரும்பியது

அபுதாபி புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு; மீண்டும் கொச்சிக்கு திரும்பியது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கொச்சி: கொச்சியில் இருந்து அபுதாபி நோக்கி புறப்பட்ட இண்டிகோ விமானத்தில், நடுவானில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் பயணிகள் 180 பேர் கடும் அவதி அடைந்தனர்.கொச்சியில் இருந்து நேற்று இரவு 11.10 மணிக்கு, அபுதாபி நோக்கி புறப்பட்ட இண்டிகோ விமானத்தில், நடுவானில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை அறிந்த விமானி பத்திரமாக தரையிறக்க முயற்சி செய்தார். அவர் கொச்சி விமான நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். நடுவழியில் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்தார். இதையடுத்து பயணத்தை தொடர்வதற்கு பதிலாக, மீண்டும் கொச்சிக்கு திரும்ப முடிவெடுத்தார். சனிக்கிழமை அதிகாலை 1.44 மணிக்கு கொச்சி விமான நிலையத்துக்கு விமானம் மீண்டும் கொச்சிக்கு திரும்பியது.பயணிகள் மற்றொரு விமானத்தில் அபுதாபிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பயணிகள் கடும் அவதி அடைந்தனர். சமீபகாலமாக விமானத்தில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு வருவது பயணியர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
செப் 06, 2025 10:48

இந்த இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா விமான நிறுவனங்களிடம் உள்ள விமானங்கள் மட்டும் ஏன் அடிக்கடி இப்படி கோளாறு செய்தியில் அடிபடுகின்றன? அவர்களிடம் உள்ள ஒரு விமானம் கூட பறக்க தகுதியற்றனவா? காயிலாங்கடைக்கு போகவேண்டிய விமானங்களா? அல்லது பராமரிப்பு என்பது சுத்தமாக இல்லவே இல்லையா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை