உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி பல்கலை மாணவர் சங்கத் தேர்தல்; தலைவர் உள்ளிட்ட 3 பதவிகளில் ஏபிவிபி வேட்பாளர்கள் வெற்றி

டில்லி பல்கலை மாணவர் சங்கத் தேர்தல்; தலைவர் உள்ளிட்ட 3 பதவிகளில் ஏபிவிபி வேட்பாளர்கள் வெற்றி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லி பல்கலை மாணவர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவி, செயலாளர், இணை செயலாளர் பொறுப்புகளில் பாஜவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.டில்லி பல்கலை மாணவர் சங்கத்திற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. 52 மையங்களில் 195 பூத்களில் 1.55 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஓட்டளித்திருந்தனர். மாணவர் சங்கத்தின் தலைவர் பதவிக்கு பாஜவின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷன் (ஏபிவிபி) அமைப்பின் சார்பில் ஆர்யன் மான் என்ற மாணவனும், காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய தேசிய மாணவர் சங்கம் சார்பில் ஜோஸ்லின் நந்திதா சவுத்ரியும், எஸ்எப்ஐ (SFI) மற்றும் ஏஐஎஸ்ஏ (AISA) கூட்டணி சார்பில் அஞ்சலி என்ற மாணவியும் போட்டியிட்டனர். அதேபோல, துணை தலைவர், செயலாளர் மற்றும் இணை செயலாளர் பதவிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. நேற்று பதிவான ஓட்டுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டன. தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஏபிவிபி வேட்பாளர் ஆர்யன் மான் 28,841 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.இந்திய தேசிய மாணவர் சங்கம் வேட்பாளர் ஜோஸ்லின் சவுத்ரி 12,645 ஓட்டுகள் மட்டுமே பெற்றார்.அதேவேளையில், துணைத் தலைவருக்கான போட்டியில் காங்கிரஸைச் சேர்ந்த ராகுல் 29,339 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். ஏபிவிபி வேட்பாளர் கோவிந்த் தன்வர் 20,547 ஓட்டுகள் மட்டுமே பெற்றார்.செயலாளருக்கான தேர்தலில் ஏபிவிபி வேட்பாளர் குணால் சவுத்ரி 23,779 ஓட்டுகள் பெற்றும், இணை செயலாளருக்கான தேர்தலில் ஏபிவிபி வேட்பாளர் தீபிகா ஜா 21,825 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றனர்.இந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்கள்தலைவர்: ஆர்யன் மான் (ஏபிவிபி)துணைத் தலைவர் : ராகுல் ஜான்ஸ்லா( என்எஸ்யுஐ)செயலாளர் : குணால் சவுத்ரி (ஏபிவிபி)துணைச் செயலாளர்: தீபிகா ஜா (ஏபிவிபி)கடந்த ஆண்டு நடந்த மாணவர் சங்கத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய தேசிய மாணவர் சங்கம் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

என்றும் இந்தியன்
செப் 19, 2025 16:24

டில்லி பல்கலையில் வெற்றி ஏபிவிபி காங்கிரஸ் அல்ல????நாராயாணா நாராயணா அது மாணவர்கள் படிக்கும் பல்கலையா இல்லை அரசியல் கட்சிகள் உலவும் இடமா????


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
செப் 19, 2025 15:38

பாஸ் தீயமுக இளைங்கர் அணி போட்டி போடலை, அதையும் எழுதுங்க


M S RAGHUNATHAN
செப் 19, 2025 15:20

பல்கலை கழக மாணவர் தேர்தலில் கூட மோடி வாக்கு திருட்டு செய்து இருக்கிறார் - ராகுல் காட்டம் . தேர்தல் கமிஷனில் புகார் அளித்து இருக்கிறார் ராகுல். தேர்தல் ஆணையம் இந்த தேர்தலில் சதி செய்துவிட்டது - ஜெயராம் ரமேஷ் பத்திரிக்கையாளர் கூட்டத்தில் குற்றச் சாட்டு


Bharathanban Vs
செப் 19, 2025 14:57

ஏபிவிபி பாஜ மாணவர் அமைப்பல்ல.... ஆர்எஸ்எஸ் குடும்ப மாணவர் அமைப்பு


ram
செப் 19, 2025 14:00

ராகுல் இதற்கும் வோட்டு திருட்டு என்று கூவி கொண்டு ஓடி வருவார்


Moorthy
செப் 19, 2025 13:49

நாளைய பாரதத்திற்கு , வலிமையான, வல்லரசு இந்தியாவுக்கு ஏ பி வி பி வெற்றி மிக மிக அவசியம் வாழ்த்துக்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை