உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இரு இடங்களில் விபத்து; தம்பதி உட்பட 5 பேர் பலி

இரு இடங்களில் விபத்து; தம்பதி உட்பட 5 பேர் பலி

ராம்நகர் : ராம்நகர், சிந்தாமணி ஆகிய இடங்களில் நடந்த விபத்துகளில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.பெங்களூரின் சிவாஜி நகரில் வசித்தவர் லிகாயத் அலிகான், 55. இவர் பழைய இரும்புப் பொருட்களை வாங்கி, விற்கும் தொழில் செய்கிறார். இவரது மகளை, மைசூரை சேர்ந்த இளைஞருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். அவ்வப்போது மைசூரு சென்று, மகளை பார்த்து வருவது வழக்கம்.அதேபோன்று மகளை பார்ப்பதற்காக, தன் மனைவி மற்றும் நண்பருடன் நேற்று முன் தினம் மாலையில் லிகாயத் காரில் புறப்பட்டார். இரவு 9:30 மணியளவில் ராம்நகரின் சங்கனபசவனஹள்ளி அருகில், பெங்களூரு - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை டிவைடரை தாண்டி, பக்கத்து சாலைக்கு பாய்ந்தது. ஏதிரே வந்த கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் மீது மோதியது.இதில் காரின் முன்பகுதி நொறுங்கியதில், லிகாயத் அலிகான், 55, அவரது மனைவி அஸ்மா பர்வீன், 45, நண்பர் நுாருல்லா ஷெரிப், 50, ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.ராம்நகர் போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.

தம்பதி பலி

சிக்கபல்லாபூர், சிந்தாமணியின் கொம்மசந்திரா கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ், 40. இவரது மனைவி சரசம்மா, 34. நேற்று காலை சரசம்மா, கணவருடன் தன் தாய் வீட்டுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.சிந்தாமணியின் ஆதர்ஷ் டாக்கீஸ் அருகில் சென்றபோது, வேகமாக வந்த பஸ், பைக் மீது மோதியதில் தம்பதி உயிரிழந்தனர்.சிந்தாமணி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை