உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ‛‛ரிஸ்க் எடுத்து ரீல்ஸ் போடுபவர்களுக்கு எச்சரிக்கை: 300 அடி பள்ளத்தில் விழுந்து இளம்பெண் உயிரிழப்பு

‛‛ரிஸ்க் எடுத்து ரீல்ஸ் போடுபவர்களுக்கு எச்சரிக்கை: 300 அடி பள்ளத்தில் விழுந்து இளம்பெண் உயிரிழப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மஹாராஷ்டிராவில் ரீல்ஸ் எடுப்பதற்காக காரை ரிவர்ஸ் எடுக்க முயன்ற 23 வயதான பெண், பிரேக்குக்கு பதிலாக ஆக்சிலரேட்டரை அழுத்தியதால், 300 அடி பள்ளத்தில் கார் விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=pyyhdoyl&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மஹாராஷ்டிரா மாநிலம் மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகரில், 23 வயதான சுவேதா என்ற பெண் தனது நண்பரிடம் ரீல்ஸ்க்காக கார் ஓட்டுவதை வீடியோ எடுக்குமாறு கூறியுள்ளார். அப்போது கார் ரிவர்ஸ் கியரில் இருந்துள்ளது. துவக்கத்தில் காரை மெதுவாக சுவேதா ஓட்டியுள்ளார்.திடீரென பிரேக் அழுத்துவதற்கு பதிலாக ஆக்சிலரேட்டரை சுவேதா அழுத்தியதால், கார் மின்னல் வேகத்தில் பின்னோக்கி சீறிப்பாய்ந்து, தடுப்புகளை உடைத்து 300 அடி பள்ளத்தில் விழுந்தது. அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சுவேதா முதல் முறையாக காரை ஓட்டிப் பார்க்கும் போது விபத்து நிகழ்ந்துள்ளது. சுவேதா, காருடன் 300 அடி பளத்தில் விழும் வீடியோ காட்சிகள் சமூகவலைதளத்தில் பரவி கண்கலங்க வைத்துள்ளது. நண்பர்களுடன் சுவேதா ரீல்ஸ் எடுத்த போது விபத்து நடந்துள்ளது. இது ரிஸ்க் எடுத்து ரீல்ஸ் எடுப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது. .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

தாமரை மலர்கிறது
ஜூன் 18, 2024 22:49

புகழ்ச்சி என்பது நல்ல காரியங்கள் செய்து அடுத்தவர்களை மகிழவிக்கும்போது, அது தானாவே தங்களை நோக்கிவரும். இப்படி ரீலிஸ் போட்டு, அதை தேடினால், பள்ளத்தில் தான் விழநேரிடும்.


Senthoora
ஜூன் 18, 2024 18:59

நல்லவேளை பாதசாரிகள் தப்பித்தார்கள். வாகனம் ஓட்டும்போது பலவருட அனுபவம் தேவை. ரிஸ்க் காட்டுபவர்களுக்கு. அதுவும் அதிவேகமாக ஓட்டுவதுக்கும். மேல்நாடுகளில் சேசிங் , அதாவது வாகனத்தில் துரத்தி பிடிப்பதுக்காக ஸ்பெஷல் ட்ரைனிங் எடுத்தவர்களை போலீஸ் வைத்திருக்கிறார்கள். காரணம் சேஸிங் செய்யும்போது மற்றவர்களுக்கு ஆபத்து வரக்கூடாது என்று, பலரின் உயிர் காப்பற்றப்பட்டு, பெற்றவர்களுக்கு வேதனையை கொடுத்திருக்கிறார். ஆத்மா சாந்தி அடையட்டும்.


Swaminathan Nath
ஜூன் 18, 2024 16:42

YAR AVRIDAM CARI KODUTHARGAL, AVARGAL PETROR VAGANAMAGA IRUNTHAL AVARGAL THAN PORUPU,


Senthoora
ஜூன் 18, 2024 19:01

23 வயது, கொஞ்சம் விவேகம் இருக்ககூடாதா? பெற்றோர் என்ன செய்வார்கள் பாவம்.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி