உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விபத்தில் ஏட்டு உயிரிழப்பு

விபத்தில் ஏட்டு உயிரிழப்பு

புதுடில்லி:தென்மேற்கு டில்லி பாலம் மேம்பாலத்தில், பைக் மீது லாரி மோதி தலைமைக் காவலர் உயிரிழந்ததார். லாரி டிரைவரை போலீஸார் கைது செய்தனர்.மேற்கு டில்லியைச் சேர்ந்தவர் அமித் சாந்திபால்,40. டில்லி மாநகரப் போலீசில் தலைமைக் காவலராக பணி புரிந்தார்.நேற்று அதிகாலை 2:00 மணிக்கு பாலம் மேம்பாலத்தில் பைக்கில் சென்றார். அப்போது, பின்னால் வந்த லாரி, பைக் மீது மோதியது. தூக்கி வீசப்பட்ட அமித், தீன் தயாள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பரிசோதனை செய்த டாக்டர்கள், அமித் ஏற்கனவே மரணம் அடைந்து விட்டதை உறுதி செய்தனர்.இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த பாலம் போலீசார், லாரி டிரைவர் சல்மான் அகமது,23,வை கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர்.உடற்கூறு ஆய்வுக்குப் பின், குடும்பத்தினரிடம் அமித் உடல் ஒப்படைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை