உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சட்ட விரோத குடியேறிகள் மீது நடவடிக்கை: குஜராத்தில் வங்கதேசத்தினர் 1000 பேர் கைது

சட்ட விரோத குடியேறிகள் மீது நடவடிக்கை: குஜராத்தில் வங்கதேசத்தினர் 1000 பேர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஆமதாபாத்: குஜராத்தில் சட்ட விரோதமாக குடியேறி, போலி ஆவணங்களை பயன்படுத்தி வசித்து வந்த 1,000க்கும் மேற்பட்ட வங்கதேசத்தவரை போலீசார் கைது செய்தனர்.குஜராத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, நம் அண்டை நாடான வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் சட்ட விரோதமாக குடியேறி வசித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதன்படி, ஆமதாபாத், சூரத் நகரங்களில் அதிரடி சோதனை நடத்திய போலீசார், சட்ட விரோதமாக குடியேறிய, 1,000க்கும் மேற்பட்ட வங்கதேசத்தவரை கைது செய்தனர். இது குறித்து, குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி நேற்று கூறியதாவது: சட்ட விரோதமாக குடியேறிய வங்கதேசத்தவரை பிடிப்பதில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி கிடைத்துள்ளது. ஆமதாபாதில், 890 பேரும்; சூரத்தில் 134 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் குஜராத்துக்கு வரும் முன், நாட்டின் பல்வேறு பகுதிகளில் தங்க, மேற்கு வங்கத்தில் இருந்து பெறப்பட்ட போலி ஆவணங்களை பயன்படுத்தி உள்ளனர்.இந்த போலி ஆவணங்களை உருவாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கைது செய்யப்பட்ட நபர்களில் பலர் போதைப்பொருள் விற்பனையாளர்கள், மனித கடத்தல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளனர்.இருவர், அல் - குவைதா பயங்கரவாத அமைப்பின், 'ஸ்லீப்பர் செல்'லாக பணியாற்றி உள்ளனர். கைது செய்யப்பட்ட வங்கதேசத்தவர், விரைவில் நாடு கடத்தப்படுவர். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குஜராத்தில் வசிக்கும் சட்டவிரோத குடியேறிகள், தாங்களாகவே போலீசாரிடம் சரணடைய வேண்டும். இல்லையெனில் அவர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படுவர். அவர்களுக்கு தங்குமிடம் வழங்கும் நபர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசின் உத்தரவுப்படி, பாகிஸ்தானியர்களை குஜராத்தில் இருந்து வெளியேற்றும் பணி முழுவீச்சில் நடக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

venugopal s
ஏப் 27, 2025 12:12

காஷ்மீர் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு மட்டுமே இது போன்ற நடவடிக்கைகள் மத்திய பாஜக அரசின் அறிவுறுத்தல் காரணமாக சில மாநில அரசுகளால் எடுக்கப்பட்டுள்ளன. இதற்கு முன் ஏன் எடுக்கவில்லை அல்லது எடுக்கப்படச் சொல்லவில்லை? ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் மட்டுமே மத்திய பாஜக அரசு விழித்துக் கொள்ளுமா? இல்லை என்றால் உறங்கிக் கொண்டே இருப்பார்களா? இதுதான் இவர்களுக்கு நாட்டின் மீது உள்ள அக்கறையா?


அப்பாவி
ஏப் 27, 2025 07:42

அம்மாடியோவ்... டபுள் இஞ்சின் சர்க்ஜார் குஜராத்திலேயே ஊடுருவிட்டாங்க. மத்த மாநிலங்களில் வூடு, வாசலோட செட்டில் ஆயிருப்பாங்க.


Yes your honor
ஏப் 26, 2025 21:47

சென்னையில் கோயம்பேடு பஸ்நிலையம் எதிரில் அமைந்துள்ள ஜெய்நகர் பகுதியில் ஏராளமான வங்கதேசத்தினர் உள்ளனர். அவர்கள் யார் என்று விசாரிக்க வேண்டியது மிக முக்கியம். ஏதாவது அசம்பாவிதம் நடைபெறும் முன்பு நடவடிக்கை எடுத்தால் நல்லது.


GMM
ஏப் 26, 2025 20:24

எப்போதும் இல்லாத அளவு வங்க கள்ள குடியேறிகள் அதிகரிப்பு ஏன் ? பாராளுமன்ற , மாநில சட்ட பேரவையின் நிர்வாக அதிகார போராட்டம். ஊக்க மருந்து, 100 நாள் வேலைவாய்ப்பு மோசடி திட்டம். மத்திய அரசு , மாநில நிர்வாகம் போட்டி போட்டு ஓட்டுக்கு வாரி வழங்கும் இலவச சலுகைகள். கடன்கள். தள்ளுபடி. இலவசம் மற்றும் சமூக நல ஆராய்ச்சியில் நீதிமன்றம். அளவிற்கு அதிக அன்ன தானம். உடல் உழைப்பு இல்லாமல் வாழ முடியும் என்ற நிலை. படுத்து விட்டான் உழைப்பாளி, பாட்டாளி. மனித வள இடை வெளியை பயன் படுத்தி வருகின்றனர் கள்ள குடியேறிகள். கலப்பு சமூகம் நிறைந்த நம் நாட்டில் தகுதி அடிப்படையில் ஓட்டுரிமை அவசியம்.


visu
ஏப் 26, 2025 19:49

வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்கள் மீது கண்காணிப்பு வைத்து பிடித்தால் போதும் இல்லை வேலைக்கு அமர்த்திவிட்டு காவல்துறைக்கு தகவல் கொடுக்க சொல்லலாம்.அப்பத்தான் தப்பி ஓட மாட்டாங்க. என்ன! காவல்துறை மாமூல் வாங்கிட்டு கண்டுக்காம விட்டால் அவ்வளவுதான்


V Venkatachalam
ஏப் 26, 2025 17:52

எங்க சப்பான் முதல்வர் சுதாவின் இன்னும் இந்த மாதிரி உத்தரவு போடலியே.. ஏற்கனவே தமிழ் நாடு எல்லாவற்றிலும் முதன்மை மாநிலமாக இருக்குன்னு கல்யாண் வீட்டிலிருந்து துக்க வீடு வரை சொல்லி பெருமை பட்டுக்கொள்கிறார்.‌ என் ஐ ஏ வந்து தேடி சுமார் ஒரு லட்சம் பேரை பிடித்து இழுத்துக்கொண்டு போன பிறகு தமிழ் நாடு அதிலும் முதன்மை மாநிலம் என்று மீட்டிங் போட்டு பேசுவாரு.


திருஞான சம்பந்த மூர்த்தி தாச ஞானஸ்கந்தன்
ஏப் 26, 2025 21:57

ஒரு லக்ஷம் பேர் வங்கதேச கள்ள குடியேறிகள் இருப்பதாக சொல்கிறவர் உங்கள் அக்கம்பக்கத்தில் இருந்தால் ஒன்று பிடிச்சுக் கொடுக்கலாம் துணிவில்லையானால் அட்லீஸ்ட் போட்டுக் கொடுக்கலாமே. போனமாதம் திருப்பூர் பக்கம் பத்து இருபது பேர் பிடிப்பட்டார்கள். குஜராத்தைப் போல ஐநூறுபேர் என்பது வங்கதேச எல்லைப்பாதுகாப்பு படையினர் BSF உதவியுடன் 2024 தேர்தலுக்காகவே கொண்டு வரப்பட்டவர்கள். வேலை முடிந்தது திருப்பியனுப்புகிறார்கள். போகட்டும் குஜராத்தில் அவர்களுக்கு போலி ஆவணங்கள் எப்படி கிடைக்கிறது?


பேசும் தமிழன்
ஏப் 26, 2025 17:48

இவனுகளுக்கு....


Kumar Kumzi
ஏப் 26, 2025 17:03

டுமீல் நாட்டுக்கு வாங்க சார் முக்கால்வாசி பங்களாதேஷ் கள்ளக்குடியேறி ரோஹிங்கியாக்கள் இங்க தான் இருக்கானுங்க


Rasheel
ஏப் 26, 2025 16:49

கூட ஒரு 500 பேர் சேர்ந்தால் மத கலவரத்தை உண்டாக்குவார்கள் திருப்பூர், ஈரோடு , கோவை, சென்னை பகுதிகளை வோட்டு வங்கிக்கு அப்பாற்பட்டு கண்காணிக்க வேண்டும். கட்டட வேலை, சாய தொழில் சாலைகள், ரெடிமேட் உற்பத்தி தொழில், பிரியாணி கடைகள், பெண்கள் தொழில் ஆகியவற்றில் குறைந்த கூலியில் ப்ரோக்கர்கள் மூலம் வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள். சட்ட விரோத செயல்கள் குறைய இது தான் ஒரே வழி.


KRISHNAN R
ஏப் 26, 2025 15:24

இங்கேயும் தமிழ் நாட்டில் தேடவும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை