உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் தொடரும் சட்ட விரோத குடியேறிகள் மீது நடவடிக்கை: வங்கதேசத்தினர் 66 பேர் கைது

டில்லியில் தொடரும் சட்ட விரோத குடியேறிகள் மீது நடவடிக்கை: வங்கதேசத்தினர் 66 பேர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் போலி ஆவணங்களை பயன்படுத்தி சட்ட விரோதமாக தங்கி இருந்த வங்கதேசத்தினர் 66 பேரை போலீசார் கைது செய்தனர்.நம் அண்டை நாடான வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள், டில்லியில் சட்ட விரோதமாக குடியேறி வசித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி, வஜீர்பூர் மற்றும் நியூ சப்ஸி மண்டி பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். சட்ட விரோதமாக வசித்து வந்த வங்கதேசத்தினரை போலீசார் கண்டறிந்தனர்.அவர்களது ஆவணங்களை போலீசார் சரி பார்த்தனர். அப்போது போலி ஆவணங்கள் தயாரித்து சட்டவிரோதமாக வசித்து வந்த வங்கதேசத்தினர் 66 பேரை போலீசார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்டவர்களில் ஆண்கள் 20 பேர், பெண்கள் 16 பேர் மற்றும் குழந்தைகள் 30 பேர் ஆவர். அவர்களிடமிருந்து போலி ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்களை நாடு கடத்தும் பணி நடந்து வருகிறது என வங்கதேச அதிகாரிகள் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்டவர்கள் தங்களது மொபைல் போன்கள் மற்றும் அடையாள ஆவணங்களை மறைத்து வைத்திருந்தது விசாரணையில் அம்பலமானது.டில்லியில் சமீப காலமாக சட்டவிரோத குடியேறிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் சட்ட விரோதமாக வசித்து வரும் வங்கதேசத்தினர் அடிக்கடி கைது செய்யப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

venugopal s
ஜூன் 10, 2025 07:05

எல்லை தாண்டி உள்ளே வர அனுமதித்ததும் இவர்களே, இப்போது வெளியேற்றுவதும் இவர்களே! இதில் மற்றவர்களை ஏன் குறை சொல்ல வேண்டும்?


Nada Rajan
ஜூன் 09, 2025 21:04

சட்ட விரோத குடியேறிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்


Velan Iyengaar, Sydney
ஜூன் 09, 2025 19:09

இதை ஏன் முந்திய அரசுகள் செய்யவில்லை...? ஓட்டு வங்கி அரசியல்...


பேசும் தமிழன்
ஜூன் 09, 2025 18:47

எல்லோரும் முகமூடி கொள்ளையர்கள் போல் முக கவசம் அணிந்து கொண்டு இருப்பது ஏன் ???


Iyer
ஜூன் 09, 2025 18:20

போர்க்கால நடவடிக்கை எடுத்து எல்லா பங்களாதேஷிகளையும் வெளியேற்றுங்கள். ஒவ்வொரு பங்களாதேஷியும் ஒரு SUICIDE BOMBER க்கு சமானம். சட்டவிரோத குடியேறிகளின் எண்ணிக்கை 5 கோடி. தீவிர, இடைவிடாத முயற்சி செய்து எல்லோரையும் அனுப்பவும். நல்லவேளையாக நீதிமன்றங்கள் அரசின் நடவடிக்கைக்கு சமர்த்தனம் செய்கின்றன.


Rangarajan Cv
ஜூன் 09, 2025 18:05

Right action. From where they got all those key documents? Why no reporting about that?


சமீபத்திய செய்தி