உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நக்சல்களுக்கு எதிராக அதிரடி : சத்தீஷ்கரில் 4 பேர் - மஹா.,வில் 5 பேர் சுட்டுக்கொலை

நக்சல்களுக்கு எதிராக அதிரடி : சத்தீஷ்கரில் 4 பேர் - மஹா.,வில் 5 பேர் சுட்டுக்கொலை

ராய்ப்பூர்: சத்தீஷ்கர், மஹாராஷ்டிராவில் நக்சல்கள் எதிர்ப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் 9 நக்சல்கள் கொல்லப்பட்டனர். சத்தீஷ்கர் மாநிலம் சுக்மா மாவட்டம் நக்சல்கள் ஆதிக்கம் அதிகம் உள்ள பகுதியாகும்.இங்கு நக்சல்கள் எதிர்ப்பு படை போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர்.இந்நிலையில் நக்சல்கள் பதுங்கியுள்ளதாக கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்புக்கு இடையே துப்பாக்கிச்சண்டை நடந்தது. 4 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

5 நக்சல்கள் என்கவுன்டர்

இதே போன்று மஹாராஷ்டிராவில் கட்ஸிரோலி மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப். மற்றும் பாதுகாப்புடையினர் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் 5 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த அக்.04-ம் தேதி சத்தீஷ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தில் நக்சல்கள் எதிர்ப்பு படை போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி 36 நக்சல்களை சுட்டுக்கொன்றனர். இது மிகப்பெரிய வெற்றி என கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக நக்சல்களை ஓடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக உயரதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை