வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இதெல்லாம் ரொம்ப லேட் 370 தூக்கி உடனேயே இதை நடைமுறைப்படுத்தி இருக்க வேண்டும்
விசாரணை முடிஞ்சதும் போட்டு தள்ளிடுங்க.
ஸ்ரீநகர்: பயங்கரவாத தொடர்பில் இருந்த 10 பேரை ஜம்மு-காஷ்மீர் போலீசின் உளவு பிரிவு கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.பயங்கரவாத ஸ்லீப்பர் செல்கள் மற்றும் நிதியுதவி, லாஜிஸ்டிக்ஸ் மற்றும் தடை செய்யப்பட்ட குழுக்களுடன் தொடர்பு குறித்து காஷ்மீரின் நான்கு மாவட்டங்களில் உள்ள 10 இடங்களில் புலனாய்வு பிரிவினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் இன்று 10 பேர் கைது செய்யப்பட்டனர்.இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:2 ஆண்டுக்கு முன் பயங்கரவாத தொடர்புள்ள வழக்கில், காஷ்மீரில் உள்ள 10 முக்கிய இடங்களில், இன்று பயங்கரவாத வலையமைப்புகளை முறியடிக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி இருந்தோம். இந்த நடவடிக்கையின் மூலம் பயங்கரவாத தொடர்பான நிதியுதவி மற்றம் தடை செய்யப்பட்ட குழுக்குளுடன் தொடர்பில் இருந்த 10 பேரை கைது செய்திருக்கின்றோம். இவர்கள் அனைவரும் பயங்கரவாத செயல்பாடுகளுக்கு ஆதரவாக இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவ்வாறு போலீஸ் அதிகாரிகள் கூறினர்.
இதெல்லாம் ரொம்ப லேட் 370 தூக்கி உடனேயே இதை நடைமுறைப்படுத்தி இருக்க வேண்டும்
விசாரணை முடிஞ்சதும் போட்டு தள்ளிடுங்க.