உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெண்களை தவறாக சித்தரித்தால் நடவடிக்கை; தெலுங்கு திரைப்படங்களுக்கு செக்

பெண்களை தவறாக சித்தரித்தால் நடவடிக்கை; தெலுங்கு திரைப்படங்களுக்கு செக்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹைதராபாத்: திரைப்படங்களில் பெண்களை தவறான முறையில் சித்தரித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெலுங்கானா மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.சமீப காலமாக தெலுங்கானா திரைப்படங்களில் பெண்களை தவறான முறையில் சித்தரிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இது தெலுங்கானா திரைப்படத்துறையில் முக்கிய பிரச்னையாக தலை தூக்கி உள்ளது. சமீபத்தில் மீண்டும் வெளியிடப்பட்ட சில தெலுங்கு திரைப்படப் பாடல்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இந்த சூழலில், திரைப்படத்துறைக்கு தெலுங்கானா மகளிர் ஆணையம் முக்கிய அறிவுரை ஒன்றை வழங்கி உள்ளது. இது குறித்து, தெலுங்கானா மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் நெரெல்லா சாரதா கூறியதாவது: திரைப்படத்தில் பெண்களை ஆபாசமான முறையில் சித்தரிக்க வேண்டாம். பெண்களை இழிவுபடுத்தினால் ஆணையம் நடவடிக்கை எடுக்கும். பாடல்களில் ஆபாசமாக நடனம் எதும் இடம்பெற்றால், நடனக் கலைஞர்கள் பொறுப்பேற்க வேண்டும். பெண்களின் கண்ணியத்தை இழிவுபடுத்தும் எதையும் செய்யக்கூடாது. திரைப்படங்கள் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் திரைப்படத்துறை தன்னைத்தானே ஒழுங்குபடுத்திக் கொள்வது துறையின் பொறுப்பாகும். பெண்களை படங்களில் கவுரவமான முறையில் காண்பிப்பது திரைப்படத் துறையின் தார்மீகப் பொறுப்பு, அவர்களை இழிவுபடுத்தக்கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

தமிழன்
மார் 21, 2025 13:01

கிழிஞ்சது போ


Ramesh Sargam
மார் 21, 2025 12:11

பெண்களை தவறாக சித்தரிக்கும் டிவி சீரியல் தயாரிப்பாளர்களுக்கும் செக் வைக்கவேண்டும். திரைப்படங்களை விட, மோசமாக இப்பொழுது வரும் சீரியல்கள்.


மூர்க்கன்
மார் 21, 2025 11:54

இதே மாதிரி சிறுபான்மையினரை அவமதிக்கும் கட்சிகள் தடை செய்யப்பட வேண்டும் என்பதிலும் மாற்று கருத்து இருக்க முடியாது. இன்னொரு இந்தியன்


Oru Indiyan
மார் 21, 2025 11:11

கட்டுப்பாடு தேவை. வன்முறை காட்சிகள் பெண்களை தவறாக சித்தரித்தல் திருநங்கைகளை கேவலப்படுத்துதல் இதோ போன்ற நிகழ்வுகள் இனி எந்த இந்திய திரைப்படங்கள், தொலைகாட்சி தொடர்கள், ஓ டி டி தொடர்கள் , யூடுபே வீடியோவிலும் காண்பிக்க கூடாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை