வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பாரத் ராஷ்டிரிய சமிதியி என்று ஒரு ட்சி இருக்கா ?? எப்போவோ காணாமல் போய் விட்டதே
ஹைதராபாத்: தெலுங்கானாவில், புஷ்பா - 2 தி ரூல் திரைப்படத்தை பார்க்க வந்த பெண் ஒருவர், கூட்ட நெரிசலில் சிக்கி பலியான விவகாரத்தில், அப்படத்தின் நாயகன் அல்லு அர்ஜுனை போலீசார் நேற்று கைது செய்தனர். பல மணி நேர பரபரப்பான திருப்பங்களுக்கு பின், அவருக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியது. தெலுங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், பிரபல நடிகர்கள் அல்லு அர்ஜுன், பகத் பாசில், நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவான புஷ்பா - 2 தி ரூல் என்ற படம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில், கடந்த 5ல் வெளியானது. இந்த படத்தின் சிறப்பு காட்சி, ஹைதராபாதில் உள்ள சந்தியா தியேட்டரில், கடந்த 4ம் தேதி இரவு திரையிடப்பட்டது. இதை பார்க்க ஏராளமானோர் தியேட்டரில் குவிந்தனர். அப்போது, சிறப்பு காட்சியை பார்க்க, முன்னறிவிப்பின்றி நடிகர் அல்லு அர்ஜுன் வந்ததாகக் கூறப்படுகிறது. இதையறிந்த பொதுமக்கள், அவரை காண குவிந்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, ரேவதி, 35, என்ற பெண் உயிரிழந்தார். மேலும், அவரது 9 வயது மகன் காயமடைந்தார். இது தொடர்பாக, நடிகர் அல்லு அர்ஜுன் உள்ளிட்டோர் மீது ஹைதராபாத் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதற்கிடையே, உயிரிழந்த ரேவதி குடும்பத்தினருக்கு, நடிகர் அல்லு அர்ஜுன் 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கினார். இந்நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுனை கைது செய்ய, ஹைதராபாதின் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு போலீசார் நேற்று வந்தனர். வீட்டுக்குள் சென்ற போலீசார், தந்தையும், பிரபல தயாரிப்பாளருமான அல்லு அரவிந்த், மனைவி சினேகா ரெட்டி முன்னிலையில், அல்லு அர்ஜுனை கைது செய்து, சிக்கட்பல்லி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். இதையடுத்து, கீழமை நீதிமன்றத்தில் அவரை போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது, படுக்கை அறைக்குள் நுழைந்து போலீசார் தன்னை கைது செய்ததாக புகார் தெரிவித்த நடிகர் அல்லு அர்ஜுன், கைது செய்யப்படுவதில் இருந்து விலக்கு அளிக்கும்படி முறையிட்டார். இதை நிராகரித்த நீதிமன்றம், 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் அவரை சிறையில் அடைக்கும்படி உத்தரவிட்டது.இதை எதிர்த்து, தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் தரப்பில் உடனடியாக மேல் முறையீடு செய்யப்பட்டது. விசாரித்த நீதிமன்றம், அவருக்கு நான்கு வாரங்கள் இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. வழக்கை வாபஸ் பெற தயார்!புஷ்பா - 2 தி ரூல் படத்தை பார்க்க வேண்டும் என, என் மகன் விரும்பினார். அதனால் சந்தியா தியேட்டருக்கு சென்றோம். எதிர்பாராதவிதமாக கூட்ட நெரிசலில் சிக்கி என் மனைவி ரேவதி உயிரிழந்து விட்டார். இந்த சம்பவத்துக்கும், நடிகர் அல்லு அர்ஜுனுக்கும் எந்த தொடர்பும் இல்லை. வழக்கை வாபஸ் பெறத் தயாராக இருக்கிறேன்.பாஸ்கர்உயிரிழந்த ரேவதியின் கணவர்.
நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாக, பாரத் ராஷ்ட்ரீய சமிதி செயல் தலைவர் கே.டி.ராமா ராவ், சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு:கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டோருக்கு அனுதாபம் தெரிவிக்கிறேன். ஆனால் உண்மையில் யார் தோல்வி அடைந்தனர்? நடிகர் அல்லு அர்ஜுன் நேரடியாக பொறுப்பேற்காத ஒன்றுக்காக, அவரை பொதுவான குற்றவாளியாகக் கருதக் கூடாது. காங்., அரசின் இந்த நடத்தையை கண்டிக்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டார்.
பாரத் ராஷ்டிரிய சமிதியி என்று ஒரு ட்சி இருக்கா ?? எப்போவோ காணாமல் போய் விட்டதே