உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நடிகர் ஷாருக்கான் முதலிடம், விஜய் 2வது இடம்: எதில் தெரியுமா?

நடிகர் ஷாருக்கான் முதலிடம், விஜய் 2வது இடம்: எதில் தெரியுமா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 2024ம் ஆண்டு அதிக வருமான வரி செலுத்தியவர்கள் பட்டியலில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் முதலிடத்திலும், நடிகர் விஜய் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.இந்த நிதியாண்டில் பிரபலங்கள் செலுத்திய வருமான வரி குறித்து ‛ பார்ச்சூன் இந்தியா' ஆய்வு செய்து பட்டியல் வெளியிட்டு உள்ளது.இந்த பட்டியலில் முதல் 10 இடங்களில் பாலிவுட் நடிகர்கள் அதிகம் பேர் உள்ளனர். தமிழகத்தை சேர்ந்த நடிகர் விஜய் மட்டுமே 2வது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் ரூ.92 கோடி வரி செலுத்தி பாலிவுட் நடிகர் ஷாருக்கான் முதலிடத்தில் உள்ளார்.2வதாக நடிகர் விஜய் ரூ. 80 கோடியும்3வதாக சல்மான் கான் ரூ.75 கோடியும்4வதாக அமிதாப்பச்சன் ரூ. 71 கோடியும்5வதாக கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி 66 கோடியும்6வதாக அஜய் தேவ்கன் ரூ.42 கோடியும்7 வதாக கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி ரூ.38 கோடியும்8 வதாக ரன்பீர் கபூர் ரூ.36 கோடியும்9வதாக ஹிர்திக் ரோஷன் மற்றும் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தலா ரூ.28 கோடியும்10 வதாக கபில் சர்மா ரூ.26 கோடியும் வரி செலுத்தி உள்ளனர்.மேலும், முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி ரூ.23 கோடி, நடிகை கரீனா கபூர் ரூ.20 கோடி, நடிகர் ஷாகீத் கபூர் ரூ.14 கோடி, கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா ரூ.13 கோடி, நடிகை கியாரா அத்வானி ரூ.12 கோடி, மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் தலா ரூ.14 கோடி நடிகர் பங்கஜ் திரிபாதி மற்றும்நடிகை காத்ரீனா கைப் தலா ரூ.11 கோடி வரி செலுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Ramesh Sargam
செப் 05, 2024 19:29

இந்தியன் இரண்டு தாத்தா எவ்வளவு கட்டினார்?


Shekar Prakash
செப் 05, 2024 18:19

நம்ம பல்லு போன நடிகர் ஒண்ணுமே கட்டல?


Easwar Kamal
செப் 05, 2024 17:04

தெலுங்கு நடிகனுங்க பீத்திக்கிட்டு அலையறானுவ நாங்கதான் வசூல் முன்னோடி தமிழ் மற்றும் ஹிந்தி எல்லாம் எங்களுக்கு பின்னால் என்று. பிசினாறிங்க ஒன்னு கூட முதல் 5 இடத்தில இல்லை . இனி எவனாவது 100 கோடி வாங்குறேன்னு எந்த தெலுங்கு நடிகன் சொன்ன உடனே அவனை பிடிச்சு உள்ள தூக்கி podunga.


Kabilan
செப் 05, 2024 15:50

அப்படியே தி மு க காரங்க எவ்வளவு வருமான வரி கட்டியிருக்காங்க என்பதையும் சொல்லியிருங்க ....


Dhilip beece
செப் 05, 2024 14:54

மிக்க பயனுள்ள தகவல்


Narasimman Lakshminarasimhan
செப் 05, 2024 13:55

ஆஹா என்ன ஒரு முக்கியமான தகவல்? எவனெல்லாம் காட்டலேன்னு ஒரு லிஸ்ட் போட்டா அது ப்ரயோஜனம் ,


சமூக நல விரும்பி
செப் 05, 2024 13:48

இனி விஜய்யிடம் இருந்து வருமான வரி கிடைக்காது. அவர் மக்களுக்கு எப்படி உதவியாக இருப்பார் பார்க்கலாம்.


Mr Krish Tamilnadu
செப் 05, 2024 13:27

வரியே இவ்வளவு னா??? சொத்து மதிப்பு ? இந்த நடப்பாண்டில் வருமானம் மட்டும் எவ்வளவு?.


Indian
செப் 05, 2024 13:26

இவ்வளவு வரி கொடுப்பதற்கு பதிலாக ,பெரிய பணக்காரர்கள் கொஞ்சம் அநாதை குழந்தைகளுக்கும் உதவலாம் .....்


R S BALA
செப் 05, 2024 16:12

இது போல உதவிய தொகைகெல்லாம் வரிச்சலுகை கழித்து மீதம் வருவதுதான் இந்த வரித்தொகைகள்...ரெயிட் விட்டதாலும் இனி ரெயிட் வரலாம் என்ற பயத்தாலும் இந்தளவிற்க்காவது வரி செலுத்துகிறார்கள் நடிகர்கள்.. உண்மையான வருமானத்தை பெரும் வருமானம் ஈடுபவர்கள் ஒருவர்கூட தெரிவிப்பதில்லை ..


sridhar
செப் 05, 2024 13:03

தெரியும் - துரோகத்தில்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை