உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கார் விபத்தில் காயங்களுடன் தப்பினார் நடிகர் சோனு சூட் மனைவி!

கார் விபத்தில் காயங்களுடன் தப்பினார் நடிகர் சோனு சூட் மனைவி!

மும்பை: கார் விபத்தில் நடிகர் சோனு சூட்டின் மனைவி மாலினி சூட், காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த விபத்து இன்று மும்பை-நாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் நடந்ததாகவும், அவர் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.நடிகர் சோனு சூட், இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர். கோவிட் காலகட்டத்தில், பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து சிறந்த மனிதாபிமானி என்று பெயர் எடுத்தவர்.விபத்து குறித்து நடிகர் சோனு சூட் கூறியதாவது:எனது மனைவி மாலினி ஒரு சிறிய விபத்தில் சிக்கியுள்ளார், ஆனால் அவர் பாதுகாப்பாக உள்ளார். உங்கள் அன்பும் ஆதரவும் எங்களுக்கு பலம் தருகிறது. தயவு செய்து எங்களுக்காக பிரார்த்தியுங்கள்.ஆதரவு தெரிவித்தவர்களுக்கு நன்றி. மேலும் எல்லோரும் அவர்களுக்காக பிரார்த்தனை செய்ய வேண்டுகோள் விடுக்கின்றேன்.இவ்வாறு நடிகர் சோனு சூட் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை