உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் கொலை அல்ல; தற்கொலை தான்; வழக்கை முடித்தது சி.பி.ஐ.,

நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் கொலை அல்ல; தற்கொலை தான்; வழக்கை முடித்தது சி.பி.ஐ.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்துக்கு அவரது தற்கொலை தான் காரணம் என்று கூறி வழக்கை முடித்துக் கொள்வதாக சி.பி.ஐ., கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். இவருக்கு வயது 34. இவர் பல்வேறு பாலிவுட் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர். இவர், 2020, ஜூன் 14ல், மும்பையின் பாந்த்ராவில் உள்ள தன் அடுக்குமாடி குடியிருப்பில் துாக்கில் பிணமாக தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.பிரேத பரிசோதனையில், இது தற்கொலை என கூறப்பட்டாலும், மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சுஷாந்தின் தந்தை தெரிவித்தார். இது தொடர்பாக மும்பை போலீசார், அமலாக்கத்துறை, சி.பி.ஐ., போதை பொருள் தடுப்பு பிரிவு உட்பட பல்வேறு துறையினர் விசாரணை நடத்தினர். இதற்கிடையே, இவரது உடலை பிரேத பரிசோதனை செய்த குழுவில் இடம் பெற்றிருந்த ரூப்குமார் ஷா, 'நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் உடலில் பல்வேறு காயங்கள் இருந்தன. உடலை ஆய்வு செய்த போது, இது நிச்சயம் தற்கொலை இல்லை; கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.இந்நிலையில், நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் தற்கொலை தான் என நான்கரை ஆண்டு விசாரணைக்குப் பிறகு சி.பி.ஐ., இறுதி அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இது குறித்து சி.பி.ஐ., தரப்பில், 'கொலை என்று சந்தேகிக்க எந்த அறிவியல் ஆதாரமும் கிடைக்கவில்லை.சமூக வலைதளங்களில் பேசப்பட்ட அனைத்து தகவல்களும் தவறானவை; மன அழுத்தம் காரணமாக சுஷாந்த் தற்கொலை செய்திருக்கலாம்' என விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. தற்கொலை தான் காரணம் என்று கூறி வழக்கை முடித்துக் கொள்வதாக சி.பி.ஐ., கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Nagarajan D
மார் 23, 2025 11:40

அப்ப ஒரு வழியா ஒரு கேசாவது முடிச்சானுங்களே....


rasaa
மார் 23, 2025 11:32

தாக்கரேவா கொக்கா? பொதுவாக இந்தியாவில், ஏன் உலகில் செல்வாக்கு மிக்கது பணம் மட்டுமே. எல்லாவற்றையும் விலைக்கு வாங்கலாம். நீதி, நேர்மை, நியாயம் ஒவ்வொன்றுக்கும் விலை நிர்ணயக்கப்பட்டுள்ளது. என்ன நேரம், காலத்திற்கு ஏற்ப விலை சீட்டு மாறுபடும்.


Nandakumar Naidu.
மார் 23, 2025 10:49

சிபிஐ கூட விலை போய்விட்டதா என்று தான் அர்த்தம் ஆகிறது. கொலையை தற்கொலை என்று சிபிஐ மூடிவிட்டதால் சிபிஐ யின் தரம் தாழ்ந்து விட்டது. Shame on CBI.


RAJ
மார் 23, 2025 09:08

சிறப்பு.. . கோர்ட்டுகளை மூடிவிடுங்கள். . இந்திய திருநாட்டில் தவறேதும் நடப்பதில்லை... எதற்கு கோர்ட்டு.. .


अप्पावी
மார் 23, 2025 08:59

இது மாதிரி இழுத்து மூட வேண்டிய கேஸ்கள் நிறைய இருக்கு. முடிச்சு வைத்து தொப்பை வளருங்க.


சமீபத்திய செய்தி