உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கும்பமேளாவில் துறவறம் பூண்டார் நடிகை மம்தா குல்கர்னி!

கும்பமேளாவில் துறவறம் பூண்டார் நடிகை மம்தா குல்கர்னி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பிரயாக்ராஜ்: பாலிவுட் நடிகை மம்தா குல்கர்னி, மகா கும்பமேளாவில் துறவறம் பூண்டார். இனி அவர், மாய் மம்தா நந்த் கிரி என்ற பெயரில் அழைக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாலிவுட்டின் பிரபல நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் மம்தா குல்கர்னி,50. இவர், தமிழில் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கிய 'நண்பர்கள்' படத்தில் நாயகியாக நடித்தவர். சினிமாவில் படிப்படியாக விலகிய இவர், கடந்த 2012ம் ஆண்டு நடந்த மகா கும்பமேளாவில் கலந்து கொண்டார். ஆன்மீகத்தின் மீது எழுந்த ஈடுபாடு காரணமாக, காவி உடைகளை அணியத் தொடங்கினார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=l8udysk9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=025 வருடங்களுக்குப் பிறகு இந்தியா வந்த அவர், பிரயாக்ராஜின் மகா கும்பமேளாவிற்கும் சென்று முழுமையான துறவறம் மேற்கொள்வதாகவும் பதிவிட்டிருந்தார். இதன்படி அவர் நேற்று (ஜன.24) மகா கும்பமேளாவின் கின்னர் அகாடாவிற்கு வந்தார். அங்கு, அதன் தலைவரான ஆச்சார்யா லஷ்மி நாராயண் திரிபாதியை சந்தித்து பேசினார். அப்போது, தமக்கு மகா மண்டலேஷ்வர் பதவி வழங்குமாறு கோரிக்கை விடுத்த மம்தா குல்கர்னி, இதற்காக முழு துறவறம் பூண்ட தயாராக இருப்பதாகக் கூறினார். இவரது கோரிக்கையை ஏற்ற பிறகு, முறையான சடங்குகளை செய்து, மம்தா குல்கர்ஜி முழு துறவறம் பூண்டார். அவருக்கு ஷியாமாய் மம்தாணந்த் கிரி எனப் புதிய பெயரிடப்பட்டது. இதையடுத்து, திரிவேணி சங்கமத்தில் நீரடிய அவருக்கு மகா மண்டலேஷ்வர் பதவி வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

அப்பாவி
ஜன 25, 2025 18:27

மார்க்கட் விழுந்திச்சுன்னா சன்னியாசம் தான்.


SUBRAMANIAN P
ஜன 25, 2025 17:35

துறவரத்துக்கு உண்டான மரியாதையே போச்சு. எல்லா கருமத்தையும் செய்துட்டு என்ன துறவறம் வேண்டிக்கிடக்கு.. இந்துமதத்தை கெடுக்குறதுக்குன்னே இருக்குது கழிசடைகள்..


Barakat Ali
ஜன 25, 2025 14:10

துறவரத்துக்கு தகுதி இருக்கான்னு பார்க்க மாட்டானுவோ ..... அந்தம்மாவின் பழைய கதை உவ்வே சமாச்சாரம் ..... அந்தம்மாவுக்கு துறவறம் கொடுத்தவர் எதை பார்த்துட்டு கொடுத்தாரோ ..... இதனால்தான் ஹிந்துமதம் அசிங்கப்பட்டு போகுது .......


Krishnamurthy Venkatesan
ஜன 25, 2025 12:04

முற்றும் துறந்த துறவி பதவியை கேட்டு பெற்றார் என்பது அதிர்ச்சியாக இருக்கிறது.


முக்கிய வீடியோ