UPDATED : நவ 25, 2024 06:56 PM | ADDED : நவ 25, 2024 06:54 PM
ஐதராபாத்: திறன் பல்கலைக்காக அதானி குழுமம் வழங்க முன் வந்த நன்கொடை ரூ.100 கோடியை ஏற்கப்போவதில்லை என்று தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது.சோலார் மின்சக்தி ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக, இந்திய அரசின் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக, தொழிலதிபர் கவுதம் அதானி உள்ளிட்டோர் மீது அமெரிக்க கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7wjrdsmu&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதனால் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், அதானியை கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில், தெலுங்கானா அரசு திறன் பல்கலைக்காக அதானி குழுமம் ரூ.100 கோடி நன்கொடை வழங்குவதாக அறிவித்திருந்தது. தற்போது சர்ச்சை வெடித்துள்ள நிலையில், அந்த நன்கொடை வேண்டாம் என்று ஆந்திரா அரசு சார்பில், அதானி குழுமத்துக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறுகையில், 'யங் இந்தியா ஸ்கில் யுனிவர்சிட்டிக்கு அதானி குழுமம் ரூ.100 கோடி வழங்க முன்வந்தது. ஆனால் அந்த நிதியை ஏற்க மாட்டோம் என்று அதானி குழுமத்துக்கு நேற்று அரசு கடிதம் எழுதியுள்ளோம்.ஜனநாயக வழியில் முறையான முறையான செயல்முறையுடன், அதானி, அம்பானி அல்லது டாடாவாக இருந்தாலும் டெண்டர்கள் ஒதுக்கப்படும்' என்று கூறினார்.கடந்த அக்டோபர் மாதம் 20ம் தேதியில் அதானி, தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டியை சந்தித்து பேசினார்.அப்போது, தொழில் திறன் பல்கலைக்கு ரூ.100 கோடி நன்கொடைக்கான காசோலையை அதானி வழங்க, அதை ரேவந்த் ரெட்டி பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.