உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அதானி குழும வழக்கை செபி அமைப்பே விசாரிக்கும்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

அதானி குழும வழக்கை செபி அமைப்பே விசாரிக்கும்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி; அதானி குழுமம் ஹிண்டன்பர்க் நிறுவனம் தொடர்பான வழக்கை பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமே (செபி) விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.இந்தியாவின் குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத்தை தலைமையகமாக கொண்டு இயங்கும் நிறுவனம், அதானி குழுமம். இந்நிறுவனம், துறைமுகம், எரிசக்தி மற்றும் உணவுப்பொருள் உட்பட பல்வேறு தொழில்துறைகளில் இந்தியாவின் பல மாநிலங்களிலும், பல அயல்நாடுகளிலும் வர்த்தகம் செய்து, பல்லாயிரம் கோடிக்கு வர்த்தகம் செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் தலைவராக கவுதம் அதானி (61) உள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7tgk1vp3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவை சேர்ந்த நிதி முதலீட்டு ஆராய்ச்சியில் புகழ் பெற்ற ஹிண்டன்பர்க் ரிசர்ச் எல்.எல்.சி., எனும் நிறுவனம், இந்தியாவின் அதானி குழுமம் கணக்குகளில் முறைகேடுகளை செய்து பொய்யாக வெளியிட்டு வருவதாகவும், நிறுவன கடன்களை பெருமளவு மறைத்து இருப்பதாகவும், இதனால் பங்கு சந்தையில் தனது முதலீட்டாளர்களுக்கு உண்மையான தகவல்களை மறைத்த குற்றத்தை புரிந்ததாகவும் பெரும் குற்றச்சாட்டை வைத்தது.இந்த செய்தி வெளியானவுடன் அதானி நிறுவன பங்குகள் இந்திய பங்கு சந்தைகளில் பெரும் வீழ்ச்சியை சந்தித்தது. இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வு இன்று (ஜன.,3) வழங்கிய தீர்ப்பில், 'அதானி குழுமத்தின் மீதான வழக்கை பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையத்திடம் (செபி) இருந்து மாற்ற எந்த அடிப்படையும் இல்லை.விசாரணையை சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை. 22 புகார்களில் 20 புகார்கள் மீதான விசாரணையை செபி முடித்துவிட்டது. எனவே, இந்த வழக்கை செபியே விசாரிக்கும். மீதமுள்ள இரண்டு வழக்குகளின் விசாரணையை 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்' என தீர்ப்பளிக்கப்பட்டது.

உண்மை வென்றுவிட்டது

தீர்ப்பு தொடர்பாக அதானி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: உச்சநீதிமன்ற தீர்ப்பு மூலம் உண்மை வென்றுவிட்டது. தங்களுக்கு ஆதரவாக நின்றவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவின் வளர்ச்சிக்கு எங்களது பணிவான பங்களிப்பு தொடரும். இவ்வாறு அந்த அறிக்கையில் அதானி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

jagan
ஜன 03, 2024 22:57

ஜார்ஜ் சோரோஸ் என்பவர் எழுதிய கட்டூரை தான் ஆதாரம் என்று சொன்னால் எவன் நம்புவான் ? இதெல்லாம் கோர்ட்டில் செல்லாது


K.Ramakrishnan
ஜன 03, 2024 22:36

அதானி நல்லவராம்.. வாய்மை வெ ன்று விட்டதாம்... சரி இருக்கிற இந்திய அரசின் நிறுவனங்களையும் அவரிடமே கொடுத்து விடுங்கள்.. எங்களையும் அவரிடமே அடிமை ஆக்கி விடுங்கள்... என்ன கொடுமை சார் இது...


தாமரை மலர்கிறது
ஜன 03, 2024 21:34

மிக சரியான தீர்ப்பு. அதானி எந்த தவறும் செய்யவில்லை. எந்த ஆதாரமும் இன்றி, எதிர்க்கட்சிகள் வெறுமனே வாயால் வடை சுடுகின்றன என்று விரைவில் தெரியவரும்.


அப்புசாமி
ஜன 03, 2024 17:00

ரொம்ப ரொம்ப நல்லவனாம். யார் சொன்னாங்க?


ஆரூர் ரங்
ஜன 03, 2024 16:48

கோர்ட் நியமித்த நிபுணர் குழுவே குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை எனக் கூறிய பின்னரும் வேறு (தவறான) தீர்ப்பை???? எதிர்பார்ப்பது சரியல்ல. ஷார்ட் செல்லிங் மூலம் ஹின்டன்பர்க் எவ்வளவு லாபம் ஈட்டியுள்ளது? அதில் எதிர்கட்சிகளுக்கு பணம் கைமாறியதா என்பதை கோர்ட் விசாரிக்க வேண்டும்.


Rengaraj
ஜன 03, 2024 15:35

செபி மீது நம்பிக்கை இல்லை என்றால் செபி நிர்வகிக்கும் பங்குச்சந்தையில் பணம் போட்டு பங்கு வியாபாரம் பண்ணலாமா ? பங்குச்சந்தையில் முதலீடு பண்ணியிருக்கும் முதலீட்டாளர்கள் பங்கைவிற்று பணத்தை எடுத்துட்டு போகலாமே ? எதுக்கு செபியை நம்பனும். ?? இந்திய பங்குச்சந்தையை நிர்வகிக்கும் செபி மீது நம்பிக்கையற்று வெளிநாட்டு சந்தைகளில் தங்கள் பணத்தை முதலீடு பண்ணுவார்களா ?


ஆரூர் ரங்
ஜன 03, 2024 14:53

பல குற்றச்சாட்டுகள் காங்கிரசு- திமுக கூட்டணி ஆட்சிக் காலத்திலேயே கூறப்பட்டவை. அப்போது அந்த ஆட்சி என்ன செய்தது? அதானி க்கு முதல் வணிக வாய்ப்பளித்ததே அந்தக் கட்சிதான்.


ஆரூர் ரங்
ஜன 03, 2024 14:51

பங்குச்சந்தை சம்பந்தப்பட்ட விஷயங்களை கவனிக்கவே செபி உள்ளது. சட்டப்படி அந்த அமைப்புதான் விசாரிக்க முடியும். விசாரணையின் முடிவில் திருப்தியில்லையெனில் கோர்ட் விசாரிக்க சட்டத்திலிடமுண்டு????. ஆனால் துவக்க நிலையில் செபி விசாரிக்கக் கூடாது என கோர்ட் கூற சட்டத்திலுமிடமில்லை. இதையே கோர்ட் உறுதிப்படுத்தியுள்ளது. இது காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலேயே உள்ள சட்டம்.


Anantharaman Srinivasan
ஜன 03, 2024 13:12

போலீஸ்காரன் மகன் திருடன். மாட்டிக்கொண்டால் அந்த போலீஸ்காரரே விசாரித்து அடுத்த திருட்டுக்கு தைரியம் கொடுப்பார்.


Anantharaman Srinivasan
ஜன 03, 2024 13:06

அதானி வழக்கை செபி விசாரித்து Every thing in order என்று வழக்கை ஊத்தி மூடிவிடும்.. அதானி அடுத்த தில்லுமுல்லுக்கு தயாராவார்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை