உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 2025ல் கூடுதல் மழைப்பொழிவு: இந்திய வானிலை மையம் கணிப்பு

2025ல் கூடுதல் மழைப்பொழிவு: இந்திய வானிலை மையம் கணிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நடப்பு 2025ம் ஆண்டில் பருவமழை, வழக்கத்தை விட கூடுதலான மழைப்பொழிவை தர வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.இந்திய வானிலை மையம் அறிக்கை:பருவ மழை இந்த ஆண்டு சராசரியை விட அதிகமாக, 105 சதவீதம் பெய்யக்கூடும். இந்த கணிப்பு 5 சதவீதம் மாதிரி பிழை விகிதத்துடன் வருகிறது. தென்மேற்கு பருவமழை பொதுவாக ஜூன் 1ம் தேதி கேரளாவில் துவங்கி செப்டம்பர் நடுப்பகுதியில் பின்வாங்கும். எதிர்பார்க்கப்படும் சராசரியை விட அதிகமாக பெய்யும் மழை விவசாயத் துறைக்கு பேருதவியாக இருக்கும்.எல்நினோ முடிவடைந்து, லா நினா நிலை 2025 பருவமழைக்கு ஆதரவாக இருக்கலாம். இது இந்தியாவில் நல்ல மழைப்பொழிவுக்கு உதவக்கூடிய காரணியாகும்.இந்த ஆண்டு நாட்டின் பெரும்பாலான பகுதிகள் சாதகமான மழைப்பொழிவு நிலைமைகளால் பயனடைய வாய்ப்புள்ளது, ஒரு சில பகுதிகளைத் தவிர. நான்கு மாத பருவமழை காலத்தில் லடாக், வடகிழக்கு மற்றும் தமிழ்நாட்டில் மழைப்பொழிவு இயல்பை விட குறைவாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.பருவமழை விவசாயிகள் மற்றும் பொருளாதாரத்திற்கு நல்ல வாய்ப்புகளை தரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

நிக்கோல்தாம்சன்
ஏப் 16, 2025 04:34

லா நினா பருவம் முடிந்து விட்டது என்று எனது விவசாய நண்பர் சஞ்சீவ் தனது முகநூலில் போட்டிருந்தார் இந்த நிலையில் எப்படி அதன் பெயர் மீண்டும் வந்துள்ளது , எனக்கு புரியாத புதிர் அய்யா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை